பக்கம் எண் :

112தொல்காப்பியம் - உரைவளம்
 

யரைக்  கூடிய  கொடுமை,  சுடுமென ஒடியாது  தகுதிக் கண்ணும்-நெஞ்சைச் சுடுமென்று கூறி அவன்
தவற்றைக் கூறுதலைத் தவிராமற் கூறுதற்குத் தக்க தகுதியிடத்தும்.
  

இன், நீக்கப் பொருட்டு. பகுதி-கூறுபாடு ஆகுபெயர். பகுதிகளைக் காத்தற்குப் பிரிவேனெனக் கூறிப்
பிரிந்து பாணர் முதலியோர்  புதிதிற்  கூட்டிய  பரத்தையரிடத்தே  ஒழுகிய  மெய்  வேறுபாட்டோடு
வந்தானைக் கண்டு அப்பகுதிகளைப் பரத்தையராகக் கூறுவானாயிற்று. அது ‘இணைபட வந்த’ என்னும்
மருதக்கலி (72)யுள்
  

* “கண்ணிநீ கடிகொண்டார்க் கனைதொறும் யாமழப்
பண்ணினாற் களிப்பிக்கும் பாணன் காட்டென்றானோ
பேணானென் றுடன்றவருகிர் செய்தவடுவினான்
மேனாணின்றோள் சேர்ந்தார் நகைசேர்ந்தவிதழினை

  

“நாடிநின்றூதாடித் துறைச் செல்லாளூரவ
ராடைகொண்டொலிக்கு நின்புலைத்தி காட்டென்றாளோ
கூடியார்புனலாடப் புணையாய மார்பினி
லூடியா ரெறிதரவொளி விட்டவாக்கினை”
  


* பொருள் : ஊரனே! நம்மை இவன் விரும்பான் என்று ஊடிய பரத்தையர் தம் உகிரால் நினக்கு
வடுவுண்டாக்கப்  பின்னாளில்  அதற்கு  மாறாக  நின்தோளைச்  சேர்ந்த  பிற பரத்தையர் தம் 
பற்களால் உண்டாக்கிய  வடுக்களையுடைய நின் உதடுகளை, இன்பம் கருதி  நின்னைத் தம்பால்
காவல் கொண்ட பரத்தையரை நீ புணருந்தோறும் யான்அழ தன் யாழ்ப்பண்ணால் களிப்படையச் செய்யும் நின்பாணன் எனக்குக் காட்டு என்று கூறினானோ?
  

கூடின  மகளிர் நின்தோளே தெப்பமாகக் கொண்டு புனலாட அது பொறாத பிற பரத்தையர் 
ஊடி  எறிந்த  சாதிலிங்கம்  உள்ள  செப்பினை,  ஊரவர்  ஆடையொலிப்பவளும்   நினக்குச் 
சேர்க்கப் பரத்தையர்க்குத் தூதாகச் செல்பவளுமாகிய புலைத்தி அச்செப்பைத்  தனக்குக் காட்டு
என்று கூறினாளோ?
  

முன்னர்க்  கூடிக்களித்த  பரத்தையருடைய  மாலையின்  முயக்கத்தால்  மென்மையடைந்த
உடம்பின்மேல்  பின்னர்க்  குறியிடம்  பெற்றுத் தழுவும் பரத்தையர் கூந்தலை நீ கோதுதலால்
உதிர்ந்த பூந்துகளை,  வீணே நின் புகழ்களை  எமக்கு வேண்டாராகிய பரத்தையர் மனைகளில்
எடுத்துக்கூறும் அறிவுடைய அந்தணன் அவளுக்குக் காட்டுக என்றானோ?