பக்கம் எண் :

144தொல்காப்பியம் - உரைவளம்
 

தண்துறை ஊரன் வரைக
எந்தையுங் கொடுக்க என வேட்டேமே”
1
  

(ஐங்குறு-6)
  

“திண்தேர் நள்ளி கானத் தண்டர்
பல்ஆ பயந்த நெய்யில் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு
எழுகலத் தேந்தினுஞ் சிறிதென்தோழி
பெருந்தோள் நெகிழ் சூழ்ந்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே
2
  

(குறுந்-210)
  

எனவரும்.
  

சீருடைப்   பெரும்பொருள்   வைத்தவழி   மறப்பினும்   என்பது-சீருடைய   பெரும்  பொருளாவது
இற்கிழமை. அதனைத் தலைமகண் மாட்டு வைத்தவிடத்து அவளை மறந்து ஒழுகினவழியும் என்றவாறு.
  

அஃதாவது  அறத்தினானாதல்  பொருளினானாதல்  அவனுக்காகிய  இசையுங்கூத்தும்  முதலியவற்றான்
அத்திறம்3 மறத்தல். அவ்வழியுந் தோழிகூற்று நிகழும்.
  

உதாரணம்:
  

“பொங்குதிரைபொருத வார்மணல் அடைகரைப்
புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்  


1. பொருள் : தலைவ!    என் தாய் (தலைவி)  நின்னை எதிர்பட்ட அன்றே நீ வரைந்து கொண்டதாக
நினைத்து  ஆதனவினி வாழ்க. பகைதணிக; அவன்  வாழ்நாள்  நீடுக   என  மனையற  மாண்புகள்
விரும்பினாள்.  யாம் ஊரன் இவளை விரைந்து வரைக; வரைவு வேண்டிவரின் எந்தையரும் கொடுக்க
என விரும்பினேம்.
  

2. பொருள் : தலைவ! நீ என்   தோழியின்    பெருந்தோளைப் பிரிந்ததனால் இழைத்த துன்பத்தைப்
போக்குதற்கு நின் வரவின் புதுமை கண்டு  முன்னறிவிப்பாகக் கரைந்து கூவிய காக்கைக்கு யாம்இடும்
பலியானது, நள்ளியென்பானின் கானத்தில் வாடும் இடையரின் பசுக்கள் தந்த நெய்யுடன், தொண்டியூர்
முழுதும்  விளைந்த  வெண்ணெல்  வெண்சோற்றை  ஏழுகலத்தில் ஏந்தி  நாளும் இட்டாலும்  மிகச்
சிறிதாகுமேயன்றி அதன் உதவிக்கு ஈடாகாது.
  

3. அத்திறம்-தலைவியின் இல்லறவுரிமை.