ஒண்செங் குருதி யுவறி யுண்டருந்துபு புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடைக் கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் புல்லிலை மராஅத்த அகன்சேண் அத்தங் கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப் பின்நின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய் வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா கவிரிதழ் அன்ன காண்பின் செவ்வாய் அந்தீங் கிளவி ஆயிழை மடந்தை கொடுங்குழைக் கமர்த்த நோக்கம் நெடுஞ்சேண் ஆரிடை விலங்கு ஞான்றே”1 |
(அகம்-3) |
எனவரும். |
காமத்தின் வலியும் என்பது-பொருளினுங் காமம் வலியுடைத்து என உட்கொண்ட வழியும் கூற்று நிகழும் என்றவாறு. |
உதாரணம் |
“விரி திரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிது பெறு சிறப்பிற் புத்தேள் நாடும் இரண்டுந் தூக்கிற் சீர் சாலாவே பூப்போல் உண்கண் பொன்போல் மேனி |
1. உப்பங்கழி முதலையின் மேல்தோல் போலச் சொரசொரப்புடைய அடிமரத்தையுடைய ஓமை மரத்தின் கிளையில் அகன்ற இடத்தில் முட்டையிட்டுக் காவற்பட்ட பேடைக்கு இரை கொண்டு தரவேண்டி எழுந்த செஞ்செவிப் பருந்தானது, புலியால் மலையடுக்கத்தில் மானைக் கொன்று இரத்தம் உண்டு ஊனையருந்தி விட்டு விட்டுச் சென்ற மான்தசையை கொள்ளையடிப் பார்போலக் கவர்ந்து செல்லும்படியான நெடிய வழியைப் பல்வேறு கலன்களை ஈட்டிவரும் உள்ளத்தோடு கடந்து செல்வதாகக் காட்டி என் பின்னேயிருந்து துரத்தும் என் நெஞ்சமே! செல்லும் அந்த அரிய வழியில் செவ்வாயும் இனிய சொல்லும் இழையும் உடைய மடந்தையின் பார்வை நம் செலவை விலக்குமானால் அந்நாளில் நின் மெய்போலும் பொய் மொழியானது என் துன்பத்தை எவ்வாறு போக்கும்? |
இதில் வழியருமை நேரிற் கண்டமைபோற் கூறலின் முன் ஒருகால்சென்று வந்தமை புலப்படும். |