பக்கம் எண் :

58தொல்காப்பியம் - உரைவளம்
 

என ஆற்றாமை மிகுதியாற் சென்றமை கூறியவாறு காண்க.
  

கைவிடின்  அச்சமும்-தலைவிதான்  உணர்த்தவும்  உணராமல்  தன்னைக்  கைவிட்டுப்  பிரியில் தான்
அவளை நீங்குதற்கு அஞ்சிய அச்சத்தின் கண்ணும், தலைவற்குக் கூற்று நிகழும்.
  

அஃது, உணர்ப்புவயின் வாராவூடலாம்.
  

“எவ்வி யிழந்த வறுமையாழ்ப்பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினை மதிவாழிய நெஞ்சேமனைமரத்
தெல்லுறு மௌவனாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே”
1

(குறுந்-19)
  

இதனுள்   அவளையின்றி  வருந்துகின்ற  நெஞ்சே  அவள்  நமக்கு  யாரெனப்  புலத்தலன்றி  ஆண்டு
நின்றும் பெயர்தல் கூறாமையிற் கைவிடின் அச்சமாயிற்று.
  

தான் அவட் பிழைத்த நிலையின் கண்ணும்-தலைவன் தலைவியைப் பிழைத்த பிரிவின் கண்ணும்.
  

‘பிழைத்த’   என்றார்   ஆசிரியர்,   இயற்கைப்  புணர்ச்சி  தொடங்கிப்  பலகாலும்  பிரியேனெனத்
தெளிவித்ததனைத் தப்பலின்.
  

உதாரணம்
  

“அன்பு மடனுஞ் சாயலு மியல்பு
மென்பு நெகிழ்க்குங் கிளவியும்பிறவு
மொன்றுபடு கொள்கையொடொராங்கு முயங்கி
யின்றே யிவணமாகி நாளைப்


செல்க     என்றாள். அது கேட்ட தலைவன், இருதலை ஓருயிர்ப்புள்ளின் ஒரு தலையானது  மற்றைத்
தலையொடு  போர் செய்தல்  போல  நீ என்னைப் புலந்து பேசுதலாற் பயன் என்? அது விட்டு என்
அரிய உயிர் நிற்கும் வழியைக் கூறுக என்றான்.
  

1. பொருள் : மனைத்  தோட்டத்து   மரத்தில்  படரும்   முல்லை  மலர்போல நறுமணம் கமழும் இக்
கூந்தலுடையாள் நமக்கு என்ன உறவுடையவள்; யாரோ ஏதிலாள் ஆவள். அதனால் எவ்வி என்பவனை
யிழந்ததனால் வறுமையுற்ற  யாழ்ப்பாணர் தலைகள் பொற்பூக்களைச் சூடாமையால் புல்லென்றது போல
நெஞ்சே நீ வருந்துக. வாழி.