பக்கம் எண் :

கற்பியல் சூ.565
 

இது வேறுபட்டு மீட்டுவரவு ஆய்ந்தது.
  

“ஆள்வழக்கற்ற பாழ்படு நனந்தலை
வெம்முனை யருஞ்சுரநீந்தி நம்மொடு
மறுதருவது கொறானே செறிதொடி
கழிந்துகு நிலையவாக
வொழிந்தோள் கொண்டவெனுரங் கெழுநெஞ்சே”
1

(ஐங்குறு-329)
  

இது மீளலுறும் நெஞ்சினை நொந்து தலைவன் உழையர்க்கு உரைத்தது.
  

“நெடுங்கழை முறிய வேனினீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய வாயின முன்னே யினியே
யொண்ணுத லரிவையை யுள்ளுதொறுந்
தண்ணியவாயின சுரத்திடையாறே”
2

(ஐங்குறு-322)
  

இஃது   இடைச்சுரத்துத்   தலைவி   குணம்   நினைந்து   இரங்கியது.  இன்னும்  ‘இரட்டுறமொழிதல்’
என்பதனாற் செய்வினை முற்றி


வற்றிய   முலையுடன் உடம்பும் கீழே படியும் படியாகப் பசி வருத்தக் கிடந்த செந்நாய்ப் பிணவினது
கெடாத  வேட்கைக்குப் போன ஆண் செந்நாயானது  முன்  தன்  பிணவுடன் கூடிய  உண்மையான
முயக்கத்தை நினைந்து  வருந்தும்படியான  நாம் புதியதாக  வந்த  இக்   கொடிய  காட்டில்   நாம்
வருந்துகின்றோம்.  இனி நாம் ஆள்வினைக்கு இங்கிருந்து  போவோம்  என்றாலும் அல்லது  அதை
விலக்கி மனைக்கே மீள்வோம் என்றாலும் நீ துணிந்ததை உணர்ந்து கூறுவாயாக.
 

1. பொருள் : தோளிற்  செறிந்ததொடி  நெகிழ   மனையில்  தனித்திருக்கும்  தலைவியால்  பிணித்துக்
கொள்ளப்பட்ட எனது வலியுள்ள நெஞ்சமானது ஆள் வழங்குதலற்ற பாழ்பட்ட அகன்ற இடத்தையுடைய
கொடிய சுரவழி நம்மொடு வந்து இப்போது திரும்பிப் போவதுவோ?
  

2. பொருள் : ஒண்ணுத லரிவையைப்  பிரிந்து  செல்லு  முற்காலத்தில் பாலை நில  வழிகள் நெடிய
மூங்கில் வெடிப்ப  வேனிற்பருவம்  நீளுதலால் கடுங்கதிர்  ஞாயிறு  பாறை   பிளவுபட எரித்தலால்
வெப்பமாயின. ஆனால் பிரிந்துவந்த  இப்பொழுது  அவளை நினைத்தலால் இனியவாயின.  (அவளை
நினைக்கக் காரணம் புள் விலங்குகளின் அன்புச் செயல்களைக் கண்டதாம்)