பக்கம் எண் :

96தொல்காப்பியம் - உரைவளம்
 

ஆங்கவிந் தொழியும் என்புலவி தாங்கா
தவ்வவ் விடத்தான் அவையவை காணப்
பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவேன் தோழி கடன் நமக்கெனவே
*
  

(கலித்-75)
  

இது பெட்பின் கண் வந்தது.1
  

“நகையா கின்றே தோழி நெருநல்
மணிகண் டன்ன துணிகயந் துளங்க
இரும்பியன் றன்ன கருங்கோட்டெருமை
  


* பொருள்: தோழீ! நெய்தலொடு ஆம்பல் மலர்பறிக்கச் சிலம்பொலிக்க ஓடும் மகளிர் எழுப்பும்
ஒலியால் மீன்  உண்ணவுள்ள பறவைகள்  அஞ்சிப் பறந்து உயர்கிளைகளில் இருந்து கூவுதல
மகளிர் தம்மைச் செய்த துன்பத்தைச் சுற்றத்தார்க்கு அறிவிப்பது போல் உள்ள ஊரன் நாளும்
புதிய பரத்தையரைப்  புணர்பவனாயின் அவனுக்கேற்ற நாள்களும் அமையின்  அதற்கு நான் 
வருந்த  நீ  மட்டும்  அவன்  வரவை  உடனே  எதிர்  கொள்கிறாயே ஏன் என என்னைக் 
கேட்கிறாய். கூறுகிறேன். தலைவனை நீ பரத்தைக் கூட்டத்தால் விளக்கமுடையனாய் வருகிறாய்
என்ன  நினைத்தாய்  எனப்  புலந்து  அவனுடன் பேசாதிருப்பேன். ஆனால் அவன் தேரில் 
அழைத்துவந்த  விருந்தை எதிர்கொள்ளுதலின் புலவாதொழிவேன்.
  

பரத்தையரைக்  கூடியமையால் வாடிய பூவோடும் என் வீட்டிற்கு வாராதே என்று ஊடுவேன். ஆனால்   எனக்கு   அவன்   அஞ்சும்   அச்சத்தையே  வாயிலாகக்  கொண்டு  வருதலுடன் 
பொய்ச்சூளுறுதலின் அதற்கு அஞ்சிப் புலவாதொழிவேன்.
  

பகலெல்லாம்   பரத்தையரிடத்திருந்தாய்   என்று   புலப்பேன்.  ஆனால்  தன்  தந்தைப் 
பெயரனாகிய தன் புதல்வனைத் தழுவி இரவெல்லாம் தூங்கான் அதற்காகப் புலவாதொழிவேன்.
  

தலைவனது   பரத்தமையால்   அவர்  தம்  வீடுகள்  தோறும்  புலவியால்  தலைவனுக்கு 
உண்டாக்கிய  வடுக்களைக்  காணுமாறுளதே என்று வருந்துவேன்.  ஆனால் அவனுடன் வரும்
விருந்தைக்   கொள்வதாலும்,   பொய்ச்சூளுறவுக்கு   அஞ்சுவதாலும்,   மகனொடு   உறக்கம் 
கொள்ளாததாலும்  புலவி நீங்கிவிடும். இதுவேயான் உறும்துயர். அறிக.
  

1. பெட்பின்கண் வந்தது. தலைவன்பால் கொண்ட விருப்பத்தால் வந்தது.