தலைவன் பாசறைப் பிரிவு |
173. | எண்ணரும் பாசறைப் பெண்ணொடும்* புணரார். | (34) |
|
பி.இ.நூ. |
ந.அக 86, இல.வி.453. |
வலனுயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும் குலமுடை மாதரொடு கலமிசைச் சேறலும் பாசறைச் சேறலும் பழுதென மொழிப. |
இளம் |
இது, தலைமகட்குரியதோர் மரபு உணர்த்திற்று. |
(இ-ள்) நினைத்தற்கரிய1 பாசறைக்கண் தலைமகளிரோடும் புணரார் தலைமக்கள் என்றவாறு. |
நினைத்தற் கருமை-மாற்றாரை வெல்லுங் கருத்து மேற்கோடலிற் றலைமகளிரை நினைக்கலாகாதாயிற்று. ‘பாசறை’ என விசேடித்தவதனால்2 ஏனைப் பிரிவுக்குமாமென்று கொள்க. |
நச் |
இஃது எய்தியது விலக்கிற்று. ‘முந்நீர் வழக்கம்’ (34) என்பதனாற் பகைதணி வினைக்குங் காவற்குங் கடும்பொடு3 சேறலாமென்று எய்தியதனை விலக்கலின். |
இதன் பொருள்:- எண் அரும்பாசறை-போர் செய்து வெல்லுமாற்றை என்னும் அரிய பாசறையிடத்து, பெண்ணொடு புணரார்-தலைவியரொடு தலைவனைக் கூட்டிப் புலனெறி வழக்கஞ் செய்யார் என்றவாறு |
இரவும் பகலும் போர்த்தொழின் மாறாமை தோன்ற ‘அரும் பாசறை’ என்றார். |
* பெண்ணொடு என்பதும் பாடம். |
1 நினைத்தற்கரிய-மனைவியரை நினைத்தற்கியலாத |
2 எண்ணரும் பாசறை எனப் பாசறையை விசேடித்தவதனால் |
3 கடும்பு-சுற்றம். |