140இறையனார் அகப்பொருள்

       அவற்றுள், ஈண்டுச் சிறைகாவல் கொள்ளப்படும். அச் சிறைகாவலது
மிகவின்கண் இடையீடாம்; இடையீடாயின விடத்துத் தலைமகட்குப்
பெரியதோர் வேறுபாடு உண்டாம்; உண்டாயினவிடத்துத் தோழிக்குப் புலனாம்;
புலனாயினவாறே யாய்க்கும் புலனாம்; புலனாயினவிடத்து, யாய் அறிவாரை
வினாவும்; வினாவினவிடத்து, அறிவார் தெய்வத்தினான் ஆயிற்று என்ப; அது
சொல்லுதற் பயத்தது தம் கருமமாகலானும், பிறிதொன்று சுட்டியுணருந்
தன்மைத்தன்று இக் குலமாகலானும் தெய்வத்தினான் ஆயிற்று என்ப.
என்றவிடத்து, இவளை முன்னிறீஇத் தெய்வத்திற்கு வழிபாடு செய்விக்கும்;
செய்த விடத்துக் கற்பழியும்; இவட்குக் கற்பழிவு வந்ததென்றும், இவட்கு
ஆற்றாமை தணியாதன்றே தெய்வத்தினான் ஆயிற்று என்றமையின்
பெயர்த்தும் அதுகண்டு யாய்க்கு ஆற்றாமை பெருகுமென்றும், தலைமகளது
கற்பழிவுக்கும் தாய் ஆற்றாமைக்கும் தோழி தான் ஆற்றாளாம். ஆற்றாமை
யென்பது பிறிதெவ்வுணர்வுமின்றி ஆற்றாமை தானே யாவது. ஆற்றாமை
ஆற்றுவதொன்றனைப் பற்றும், ஆற்றுவது பிறிதின்மையின் அறிவாரை
வினாவும்; வினாவுமிடத்து என்னை வினாவும்; யான் அறியேன் என்றதன்
புறத்தாம் பிறரை வினாவுவா ளாவது; என்னை வினாவினவிடத்து இது
சொல்லுவன் என்று கூட்டமில் நாட்டவகையாற் சிந்தித்துக்கொண்டிருக்கும்.
இருந்த நிலைமைக்கண், தாய் படிமக்கலத்தொடும் புகும்; புக்கு, மகளை
அடியிற்கொண்டு முடிகாறும் நோக்கி, ‘அன்னாய், என்மகட்கு இவ் வேறுபாடு

எற்றினான் ஆயிற்று?’ என்னும். என்றவிடத்து, ‘என்னால் அறியப்படுவதுஞ்

சிறிது உண்டு’ என்று மேற்சொல்லியவாறே மாறுகோள் இல்லாத வகையான்

அறத்தொடு நிற்கும்; அங்ஙனம் அவள் நற்றாய் தொடக்கத்தார்க்கெல்லாம்

அறத்தொடு நிற்கும் என்பது.

      இனி, ‘நொதுமலர் வரையும் பருவம் ஆயினும்’ என்பது - நொதுமலர்
என்பார் ஏதிலர், அவர்தாம் வரைவொடு வந்தார் என்பது கேட்டவிடத்துத்

தலைமகள் ஆற்றாளாம், ஆற்றாளாயினவிடத்து, மேற்சொல்லியவாறே தோழி
செவிலித்தாய்க்கு அறத்தொடு நிற்கும் என்பது.

 

      ‘வரைவெதிர்கொள்ளாது தமர் அவண் மறுப்பினும்’ என்பது -

தலைமகன்தமர் பார்ப்பார் சான்றோரை முன்னிட்டு அருங்கலங்களோடும்
வரைவதற்கும் புகுவார்; புக்கவிடத்து ஒரு காலைக்கு மறுப்பர் பிற, போகாக்
குமரியை உடையார்போலக் கதுமென நேர்ந்திடாரன்றே! பரியம் சிறிது
என்றானும், இளையாளால் என்றானும், நாளும் புள்ளும் திருத்தி வாரீரோஎன்