ரன்றே, குடுமிக்கூந்தலில் நறுநெய் பெய்து, கொண்டானிற் பின்னையும்
இருந்து, சோறு தின்று வாழ்கின்றாள், ஓ கொடியளேகாண்! என்று நித்தல்
பழி தூற்றப்பட்டிருந்து, பின்னுமே ஒரு நாட் சாவல், அதனான் இன்றே
சாவல்’ எனச் சாவவும் பெறும்; அதுவன்றிப் புகழ்வேண்டிச் சாவவும் பெறும்;
கணவனோடு செத்தார் சுவர்க்கம் புகுவர் என்னும் உரைகேட்டு அது
வேட்கையானுஞ் சாம்; அப்பரிசு அன்றி அன்பினானுஞ்சாம்; அஃது
ஒருதலையா நிகழ்வது அன்று என்பது.
இனி, நோவின் நோதல்
என்பது, இன்னநோ என்று அறியலாகாது;
அதுவும் திரிபுடைத்து; 1அன்பு உள்வழியும் அன்பு இல்வழியும் தோன்றும்
என்று மறுக்கப்படும்.
ஒண்பொருள் கொடுத்தல் என்பது, கணிகையர் கூட்டம்
பொருளான் ஆம்; ஆகலின், அதுவும் அன்பு அன்று.
நன்கினிது மொழிதல் என்பது, நன்கினிது
சொல்லிப் பகைவருந்
தம் கருமம் முடிப்பர்; ஆகலின், அதுவும் அன்பு அன்று.
புணர்வு நனிவேட்டல் என்பது, அச்சம் காரணத்தானும்
புணர்வு
வேட்டார் போலப் புணர்வர்; ஆகலின், அதுவும் திரிபுடைத்து.
பிரிவு நனியிரங்கல் என்பது, நீரும் ஆடார்,
பூவுஞ்சூடார், சாந்தும்
அணியாராய்ப் பிரிந்திருந்தாற்போல வாடியிருப்பர், அன்பு இலாதாரும்;
ஆகலின், அதுவும் திரிபுடைத்து.
இனித், திரிபின்றி இக்குணங்கள் நிகழ்ந்தவழி அன்பு
உண்டு எனக்
கொள்க. அஃது எங்ஙனம் நிகழுமோ எனின், அவன் இறந்துபட்டவாறே
தானும் இறந்துபட்டவழி அன்பினானே ஆயிற்று எனக் கொள்க.
அல்லாதனவும் இவ்வகையால் திரிபு இல்லன அன்பினானே ஆயிற்று எனக்
கொள்க.
அல்லதூஉம், அன்பு எனப்பட்டது, தான் வேண்டப்பட்ட
பொருளின்கண் தோன்றும் உள்ளநிகழ்ச்சி. அதனைக் காட்டிக் காண்க
என்னானன்றே, தான் அறிந்த பொருளாகலின், என்னை, மாணாக்கன்
நீர்வேட்டான், நீர்வேட்ட வேட்கையைக் காட்டுக என்னான், தான் அறிந்த
பொருளாகலின்; காட்டுக என்னுமே யெனின் வஞ்சித்தானாம்; அவனை
ஆசிரியன் அறிவிக்கலுறுமேயெனின் பேதையாயினானாம்.
(பாடம்) 1. அன்பின் வழியும்.
|