என்னோ எனின், பூப்புப் புறப்பட்டஞான்று நின்ற கரு வயிற்றிலே அழியும்;
இரண்டாம் நாளின் நின்ற கரு வயிற்றிலே சாம்; மூன்றாம் நாள் நிற்குங் கருக்
குறுவாழ்க்கைத்தாம், வாழினும் திருவின்றாம்; அதனாற் கூறப்படாது என்ப.
‘பூப்புமுதன்
முந்நாட் புணரார் புணரின்
யாப்புறு மரபின் முனிவரும் அமரரும்
யாத்த கரண மழியு மென்ப’
எனப் பிறரும் ஓதினாராகலான் அமையாது என்பது. (10)
சூத்திரம்-44
கற்பினுட் பிரிந்தோன் பரத்தையின்
மறுத்தந்து
அப்பொருட் படுப்பினும் வரைநிலை இன்றே.
என்பது என்னுதலிற்றோ எனின், மேலைச் சூத்திரத்திற்கு உரியதோர்
புறனடை
உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: கற்பினுட
பிரிந்தோன் என்பது - பரத்தையர்
சேரியனாய்ப் பூப்பு உணர்த்தப்பட்ட தலைமகன் என்றவாறு, பூப்பு நிகழ்ந்த
முதன் மூன்று நாளும் வந்து சொற்கேட்கும்வழி உறைவானிலனாயின்
தலைமகன் கற்பினுட் பிரிந்தோன் எனப்படான்; கற்பு என்பது பூப்பு,
என்றவாறு: அப் பூப்புக் கற்புக்காலத்தன்றிக் களவுகாலத்து நிகழாமை நோக்கிப்
பூப்பினையுங் கற்பு என்று சொல்லினார் என்பது; பரத்தையின் மறுத்தந்து
என்பது-அம் மூன்று நாளுங் கழித்துப் பரத்தையர்சேரிநின்று நீங்கி வருவது
என்றவாறு; அப் பொருட் படுப்பினும் என்பது-அறத்தாறுபடுப்பினும்
என்றவாறு; அறத்தாறு படுத்தல் என்பது, தலைமகளை வாயில்களால்
சிவப்பாற்றுவித்துப் புக்குத் தலைமகளோடு புணர்தல்; வரைநிலை இன்றே
என்பது-குற்றமெனப்படாது அத்துணைச் சிறப்பின்றாயினும் என்றவாறு.
தலைமகளை வாயில்களாற் சிவப்பாற்றுவித்தற்குச் செய்யுள்:
தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல்
‘பொன்னார் புனலணி ஊரன்வந் துன்னிற்
புறங்கடையான்
என்னா அளவிற் சிவந்தாள் சிவந்தும் இயல்பதுவன்
றன்னா யெனச்சிவப் பாற்றினள் வல்லத் தரசவித்த
மின்னார் அயில்மன்னன் தென்புனல் நாடன்ன மெல்லியலே’ (288)
என்பது.
(11) |