முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.’ (அகத்-5)
‘காரு மாலையு முல்லை.’ (அகத் -6)
‘குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.’ (அகத் -7)
‘பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப.’ (அகத் -8)
‘வைகுறு விடியல் மருதம்.’ (அகத் -9)
‘எற்பாடு
நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும்’ (அகத -10)
‘நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.’ அகத் -11)
‘பின்பனி தானும் உரித்தென மொழிப’ (அகத் - 12)
மருதத்திற்கும் நெய்தற்கும் பெரும்பொழுது சொல்லிற்றின்மையின்,
அறுவகை இருதுவும் உரிய எனக் கொள்க; இவை முதல்.
ஐந்திணைக் கருப்பொருள்
இனிக், கரு என்பது தெய்வமும் உணாவும் மாவும்
மரமும் புள்ளும்
பறையும் செய்தியும் யாழும் முதலாக உடையது;
என்னை,
‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ1
அவ்வகை பிறவுங் கருலென மொழிப’ (அகத் -
20)
என்றாராகலின். அவை அம்முறையானே சொல்லுதும்.
குறிஞ்சிக்குத்,
தெய்வம் - முருகவேள்;
உணா
- ஐவன நெல்லும், திணையும்;
மா
- புலியும், பன்றியும், யானையும்;
மரம்
- அகிலும், ஆரமும், திமிசும், தேக்கும், வேங்கையும்;
புள்
- கிளியும், மயிலும்;
பறை
- வெறியாட்டுப்பறையும், தொண்டகப்பறையும், குரவைப்பறையும்,
(பாடம்) 1. தொகைஇய.
|