24இறையனார் அகப்பொருள்

தாது; ஒழுக்கமே திணை எனப்படும். குறிஞ்சியாகிய ஒழுக்கம் நிகழ்ந்த
நிலமும் குறிஞ்சி எனப்பட்டது; என்னை, விளக்காகிய சுடர் இருந்த இடனும்
விளக்கு எனப்பட்டது போல என்பது.

       இனி, ஒரு சாரார் ஒழுக்கத்தினையும் திணை என்ப. நிலத்தினையும்
திணை என்ப. ஆகலானன்றே, ‘அன்பினைந்திணை’ என்றது,
ஐந்திணையாடை, ஐந்திணை மஞ்சிகை என்றதுபோல என்ப; அது
பொருந்தாது. அஃதே கருதியது எனின், முன்னர்த்,

    
  ‘திணையே கைகோள்’              (இறையனார் - 56)
என்னானன்றே,

       ‘இணையே கைகோள்’ என்னுமன்றே, இணை என்று
 கருதினானாயின் என்பது. அஃதேயெனின், ‘ஐந்து திணை’ என்னும், ஐந்து
சாண், ஐந்து கணம் என்றதுபோல எனின், அறியாது கடாவினாய்; ஐந்து
தலையுடைய நாகத்தை ஐந்தலை நாகமும் என்ப; ஐந்து தலை நாகமும்
என்ப: இரு முடிபும் உடைத்து. என்னை, குற்றியலுகரப் புணரியலுள்,

       ‘
முதனிலை யெண்ணின்முன் வல்லெழுத்து வரினும்
       ஞநமவத் தோன்றினும் யவவந் தியையினும்
       முதனிலை யியற்கை யென்மனார் புலவர்
’ (குற்றியலுகர-73)

என்றாராகலின்,

                     
ஐந்திணைக் களவு

       அஃதேயெனின், அன்பினானாய ஒழுக்கத்தை அன்பின் வேறென்று
கொள்வல், தச்சனானாய மாடம் தச்சனின் வேறு ஆயதுபோல என்றாற்கு,
அதுவன்று; பொன்னினானாய குடம் பொன்னின் வேறல்லதுபோல என்பது.
மூன்றாம் வேற்றுமை காரண காரியத்தை வேறு உணரவும் நிற்கும், வேறன்றி
உணரவும் நிற்கும்; அவற்றுள், வேறன்றி உணரநிற்கும் பகுதி கொள்க.
அஃதேயெனின், ‘ஐந்திணை’ என்பதன் முன்னர்க், ‘களவு’ என்னுஞ் சொல்
எத்திறத்தான் வந்தது? ஒரு சொன்முன் ஒரு சொல் வருங்காற் பயனிலை
வகையானும், தொகைநிலை வகையானும், எண்ணுநிலை வகையானும் என
மூன்றினுள் ஒன்று பற்றியன்றே வருவது; அவற்றுள், இஃது எவ்வகையான்
வந்ததோ எனின், தொகைநிலைவகையான் வந்தது என்பது. தொகை தாம்
பல; அவற்றுள் இஃது எத்தொகையான் வந்ததோ எனின்,
வேற்றுமைத்தொகையான் வந்தது என்பது.