நூற்பெயரும், யாப்பும், நுதலிய பொருளும், கேட்போரும், பயனும் என
இவை.
என்னை,
‘ஆக்கியோன்
பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய
பொருளே
கேட்போர் பயனோ டாயெண்
பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்
தியல்பே’
என்றாராகலின்.
இவற்றொடு காலமும் களனும் காரணமும் கூட்டிப் பதினொன்று
என்பாரும் உளர்;
என்னை,
‘காலங்
களனே காரணம் என்றிம்
மூவகை யேற்றி
மொழிநரும் உளரே’
என்றாராகலின்.
ஆக்கியோன் பெயர் என்பது - நூல் செய்த ஆசிரியன்
பெயர்
என்றவாறு; இந் நூல் செய்தார் யாரோ எனின், மால்வரை புரையும்
மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக்
குறுங்கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள் என்பது.
வழி
என்பது - இந்நூல் இன்னதன் வழித்து என்பது. இது,
வினையினீங்கி விளங்கிய அறிவின் முனைவனாற்1 செய்யப்பட்டதாகலான்
வழிநூல் என்று சொல்லப்படாது, முதனூல் எனப்படும் என்பது.
எல்லை
என்பது - இந்நூல் இன்ன எல்லையுள் நடக்கும் என்பது.
இந்நூல் எவ்வெல்லையுள் நடக்குமோ எனின், வடக்கு வேங்கடம், தெற்குக்
குமரி, கிழக்கும் மேற்குங் கடல் எல்லையாக நடக்கும் என்பது.
என்னை,
’வடக்குந்
தெற்குங் குடக்குங் குணக்கும்
வேங்கடம் குமரி
தீம்புனற் பௌவமென்
றந்நான் கெல்லை
அகவயிற் கிடந்த
நூலதின் முறையே
வாலிதின் விரிப்பின்’
எனவும்,
‘வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து’
(பாடம்) 1. செய்யப்பட்டமையான்.
|