காட்சி துணைக்காரணம் அவ்வினை பயத்தற்கு; வித்து
முளைத்தற்கு
நிலனும் நீரும் இருதுவும் துணைக்காரணம் ஆயிற்றுப் போலவும், சோறாதல்
இயல்பிற்றாகிய அரிசி சோறாதற்கு அடுவானைத் தொடக்கமாகவுடைய
காரணம் துணைக்காரணம் ஆயிற்றுப் போலவும் என்பது. அஃதேயெனின்,
காட்சி துணைக்காரணம் பிற எனின், காட்சியின்முன் கிளர்ந்ததோ? பின்
கிளர்ந்ததோ? உடனே கிளர்ந்ததோ உள்ளத்துத் தான் கிளர்கின்றது எனின்,
முன்னைக் கடா வந்து எய்துமால், என்னையோ எனின், காட்சியோடு
உடனே கிளரும்; என்னை, இருட்டகத்து விளக்குக்கொண்டு புக்கால், விளக்கு
வாராத முன்னரும் இருள் நீங்காது; விளக்கு வந்தபின்னரும் இருள் நீங்காது;
விளக்கு வருதலும் இருள் நீக்கமும் உடனே நிகழும். அதுபோலக், காட்சியும்
ஞான வொழுக்கக் குணங்களது தன்மையழிவும் உடனே நிகழும்.
விளக்கினைக் காட்சியாகக் கொண்டு, ஞானவொழுக்கங்களை இருளாகக்
கொள்க.
இனிக்,
காமப் புணர்ச்சி
என்பது-தலைமகனும் தலைமகளும்
தமியராய் ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுத் தம் உணர்வினரன்றி வேட்கை
மிகவினாற் புணர்வது என்பது.
ஆயின் இவர், மேற் பொருவிறந்தார் தலைமகனுந் தலைமகளும்
என்றமையான், அவனும், கற்கந்தும் எறிபோத்தும்1 கடுங்கண் யானையும்
தறுகட் பன்றியும் கருவரையும் இருநிலனும் பெருவிசும்பும் அனையார், ஆளி
மொய்ம்பினர், அரிமான் துப்பினர் பற்பல் நூறாயிரவர் கூர்வேல் இளையர்
தற்சூழச் செவ்வன் என்பது முடிந்தது.
இவளும் உடன் பிறந்து, உடன் வளர்ந்து, நீர் உடனாடிச்,
சீர்
உடன்பெருகி, ஓல் உடனாட்டப், பால் உடனுண்டு, பல் உடனெழுந்து, சொல்
உடன்கற்று, பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும்
மாட்சியும் உடையார், பற்பல் நூறாயிரவர் கண்ணும் மனமும் கவரும்
ஒண்ணுதல் மகளிர் தற்சூழத், தாரகை நடுவண் தண்மதிபோலச் செல்வாள்
என்பது முடிந்தது.
முடியவே, தமியராய்ப் புணர்ந்தார் என்பதனொடு மாறுகொள்ளும்
எனின், மாறுகொள்ளாது; என்னை அவள் ஆயங்களும் பொழிலிடம்
புகுதலும் விளையாட்டு விருப்பினாற் பிரியும். என்னை பிரியுமாறு எனின்,
ஒருவர் ஒருவரின் முன்னர்த் தழை விழைதக்கன தொடுத்தும் என்றும், கண்ணி தண்ணறு நாற்றத்தன
செய்தும் என்றும், போது மேதக்கன கொய்தும்
(பாடம்) 1. எய்ப்போத்தும்.
|