34இறையனார் அகப்பொருள்

      நாண் என்பது பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொருதன்மை;

      மடம் என்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை;


      அச்சம் என்பது பெண்மையின் தான் காணப்படாததோர் பொருள்
கண்டவிடத்து அஞ்சுவது;

      பயிர்ப்பு என்பது பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும்
நிலைமை.

      இந்நான்மையும், புனல் ஓடுவழிப் புற்சாய்ந்தாற்போல, வேட்கையான்
மீதூரப்பட்டுச் சாய்ந்து கிடக்கும்.
 
      வேட்கை என்பது என்னோ எனின், ஒருவர் ஒருவரை
இன்றியமையாமை. அவ்வின்றியமையாது நின்ற வேட்கை எல்லா
உணர்வினையும் நீக்கித் தானேயாய், நாண்வழிக் காசு போலவும், நீர்வழி
மிதவைபோலவும், பான்மைவழி யோடி இருவரையும் புணர்விக்கும் என்பது.
ஆகலான், தமியராய்ப் புணர்வது தலைமையொடு மாறுகொள்ளாது என்பது.
இது காமப்புணர்ச்சி என்பது.

              
களவுப்புணர்ச்சி-உள்ளப்புணர்ச்சி

      இதனை, ஓர் ஆசிரியன், உள்ளத்தானே புணர்ந்தார் என்னும்;
என்னை, மெய்யுறுபுணர்ச்சி பொருவிறந்தார் என்பதனொடு மாறுகொள்ளும்.
யாங்ஙனம் மாறுகொள்ளுமோ எனின், ஏகதேசத்துப் பிறர்க்குரிய பொருளை
வௌவினானைப் பெருமைசொல்லப்படாது; அதுபோல, இவனும் கொடுப்ப
அடுப்ப எய்தற்பாலான். ஏகதேசத்து எதிர்ப்பட்டுச் சென்றெய்தி
முயங்கினமையின். என்னை, பிறர்க்கு உரிய பொருள் எளிதாகச்
செய்யப்படாமையினாம், பெரியனாய்ச் சென்றது. அங்ஙனமாகில், உலகத்துப்
பன்மக்களெல்லாம் பெரியர், சீராதபொழுது பிறருடைமை கொள்ளாது, சீர்த்த
பொழுது வௌவுதலால்.

      இனி, இவளும் குரவரது பணியாற் சென்று அவனை வழிபடற்பாலாள்,
ஏகதேசத்துத் தலைப்பட்டு வழிபட்டமையாற் பெருமை இலள்; என்னை,
தேர்ந்து காணாது, உள்ளம் ஓடின வழி ஓடுதலான். உள்ளத்தான்
வேட்கப்படாத பொருளில்லை; அவ் வேட்கப்பட்டவற்றுக்கணெல்லாம்,
அறத்தின் வழுவாமையும் பொருளின் வழுவாமையும் தனக்குத் தகவும்
ஆராயாது,