4 இறையனார் அகப்பொருள்

எனவும் காக்கைபாடினியாரும் தொல்காப்பியனாரும் சொன்னாராகலின்
என்பது.

         நூற்பெயர் என்பது - நூலது பெயர் என்றவாறு. நூல்
பெயர்பெறுமிடத்துப் பல்விகற்பத்தாற் பெயர்பெறும்; என்னை, செய்தானாற்
பெயர்பெறுதலும், செய்வித்தானாற் பெயர் பெறுதலும், இடுகுறியாற்
பெயர்பெறுதலும், அளவினாற் பெயர் பெறுதலும், சிறப்பினாற் பெயர்
பெறுதலும் என்க.

         செய்தானாற் பெயர் பெற்றன: அகத்தியம், தொல்காப்பியம் என
இவை.

         செய்வித்தானாற் பெயர் பெற்றன: சாதவாகனம், இளந்திரையம் என
இவை.
         இடுகுறியாற் பெயர் பெற்றன: நிகண்டு நூல், கலைக் கோட்டுத்
தண்டு என இவை.

         அளவினாற் பெயர் பெற்றது: பன்னிருபடலம் என்பது.
சிறப்பினாற் பெயர் பெற்றது: களவியல் என்பது; என்னை, களவு கற்பு என்னுங்
கைகோள் இரண்டனுள் களவினைச் சிறப்புடைத்தென்று வேண்டும்
இவ்வாசிரியன்.

என்னை,


        ’முற்படப் 2புணராச் சொல்லின் மையிற்
         கற்பெனப் படுவது களவின் வழித்தே
(இறை-15)

என்று வேண்டுதலின். கற்பு, களவுபோல ஒருதலையான அன்பிற்று அன்று.

         இனி, யாப்பு என்பது - நூல் யாப்பு, நூல் யாக்குமிடத்து நான்கு
வகையால் யாக்கப்படும்; தொகுத்தும், விரித்தும், தொகைவிரியாகவும், மொழி
பெயர்த்தும் என.

என்னை,

           ‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்
         ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே’
(மரபியல், 98)


என்றாராகலின்.

         அவற்றுள், இது தொகுத்தியாக்கப்பட்டது; என்னை, உலகத்து
நடக்கும் அகப்பொருட் செய்யுளிலக்கணம் எல்லாம் இவ்வறுபது
சூத்திரத்துள்ளே தொகுத்தானாகலின் என்பது.

         (பாடம்) 1. தொல்காப்பியத்துக்குச் சிறப்புப்பாயிரங் கூறிய
பனம்பாரனாரும். 2. புணராதசொல் லின்மையிற்.