44இறையனார் அகப்பொருள்

புலனாக, இவள் எவ்விடத்தும் தன் தன்மை என்பது ஒன்றிலள், என்
தன்மையளே; யான் ஆற்ற ஆற்றி, யான் ஆற்றாத இடத்துத் தானும்
ஆற்றாளாம் ஆகலான், யான் பிரிந்தவிடத்து என் குறிப்பன்றி இறந்துபடாள்;
அல்லதூஉம், யான் பிரியாது விடப் புறத்தார் உணர்வர். புறத்தார் உணரவே,
இவள் ஆற்றாளாம். ஆகலான், யான் பிரியவே புறத்தார் உணரார் ஆகவே,
இவள் ஆற்றும் எனக் கருதி, இவள் கருங்குழற் கற்றை மருங்கு திருத்தி,
அளகமும் நுதலும் தகைபெற நீவி, ஆகமும் தோளும் அணிபெறத் தைவந்து,
குளிர்ப்பக் கூறித், தளிர்ப்ப முயங்கிப் பிரிவல் என்று வலித்தான். வலித்துப்,
பிரிவச்சம் என்பது ஒன்று சொல்லும்.

                     
 பிரிவச்சம்

       பிரிவச்சம் என்பது, தான் பிரிவு அஞ்சிற்றும் பிரிவச்சம்; அவளைப்
பிரிவு அஞ்சுவித்ததும் பிரிவச்சம்; ஆகலின், பிரிவச்சம் எனப்பட்டது. அது
யாங்ஙனஞ் சொல்லுமோ எனின், ‘நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன்’
என்னும். அதற்குச் செய்யுள்:

   
மின்னிற் பொலிந்தசெவ் வேல்வலத் தான்விழி ஞத்தெதிர்ந்த
    மன்னிற்கு வானங் கொடுத்தசெங் கோன்மன்னன் வஞ்சியன்னாய்
    நின்னிற் பிரியேன் பிரியினும் ஆற்றே னெடும்பணைத்தோட்
    பொன்னிற் பசந்தொளி வாடிட என்னீ புலம்புவதே
’ (10)

   
அணிநிற நீண்முடி வேந்தரை யாற்றுக் குடியழியத்
    துணிநிற வேல்வலங் காட்டிய மீனவன் தொண்டியன்ன
    பிணிநிற வார்குழற் பெய்வளைத் தோளிநின் னிற்பிரியேன்
    மணிநிறம் பொன்னிற மாயிட என்னீ வருந்துவதே
’ (11)
 

    ‘பொன்னார் புனைகழற் பூழியன் பூலந்தைப் பூவழிய
    மின்னா ரயில்கொண்ட வேந்தன் விசாரிதன் வெண்திரைமேல்
    முன்னாண் முதலறி யாவண்ண நின்ற பிரான்முசிறி
    யன்னாய் பிரியேன் பிரியினும் ஆற்றே னழுங்கற்கவே’
(12)

என, இவ்வகை கேட்ட தலைமகள், ‘எம்பெருமான் நின்னிற் பிரியேன்,

பிரியினும் ஆற்றேனாவல்’ என்கின்றானால், பிரிவு என்பதும் ஒன்று
உண்டுபோலும்; கேட்ட தகைமையால் அது தம் காதலரைக் காணாதும்
கேளாதும் கையின் அகன்று மெய்யின் நீங்குவது எனக் கலங்கிக்,
கார்மருங்கின் மின்னுப் போலவும், நீர்மருங்கிற் கொடிப்போலவும், தளிரும்
முறியும் ததைந்து, குளிரும் நளிரும் கவினி எழாநின்றதோர் கவின்பெறு
கொடிப்போலும் காரிகை, கண்ணாடி மண்டிலத்து ஊது ஆவிபோலக் காண
ஒளிமழுங்கிக், கனல்முன் இட்ட மெழுகுப்