52இறையனார் அகப்பொருள்

 வன்தாட்களிறு கடாஅயன்று வல்லத்து மன்அவியச்
  சென்றான் கருங்கயல் சூட்டிய சென்னிச்செம் பொன்வரைபோல்
  நின்றான் நிறையு மறிவுங் கலங்கி நிலைதளரும்
  என்றால் தெருட்டவல் லாரினி யாரிவ் விருநிலத்தே
.’           (32)


                
 இயல் இடம் கேட்டல்


      இவ்வகை சிந்தித்து, ‘அவனை இடனன்றிக் கழறினென், என்
பாக்கியம்பிற, கழற்றெதிர் மறுத்துச் சொல்வானாயிற்று; சொல்லாது
இறந்துபட்டா னெனினும் செய்யலாவதில்லை; பெரியதோர் இழுக்கம்
செய்தேன்’ என ஆற்றானாயினான். ஆற்றானாயினானது ஆற்றாமை
ஆற்றுவதொன்றனைப் பற்றும்; ‘யான் இறந்துபட்டவிடத்து இவனை இஃது
எய்துவிக்கல் ஆகாது. யான் உளேனாவதே பொருள்’ என இறந்துபடானாய்
நின்று ‘எவ்விடத்து? எத்தன்மைத்து? நின்னாற் காணப்பட்ட உரு’ என்னும்.
அதற்குச் செய்யுள்:

 
வல்லிச் சிறுமருங் குற்பெருந் தோள்மட வார்வடிக்கண்
  புல்லிப் பிரிந்தறி யாதமந் தாரத்தெங் கோன்புனனாட்டு
  அல்லித் தடந்தா மரைமல ரோஅவன் தண்ணளியார்
  கொல்லிக் குடவரை யோஅண்ணல் கண்டதக் கொம்பினையே


  ‘கண்டார் மகிழுங் கடிகமழ் தாமரை யோகடையல்
  விண்டார் விழுநிதிக் குப்பையும் வேழக் குழாமும்வென்று
  கொண்டான் மழைதவழ் கொல்லிக் குடவரை யோவுரைநின்
  ஒண்டா ரகலம் மெலிவித்த மாதர் உறைவிடமே
.’              (34)


                 
இயல் இடம் கூறல்

      என்பது கேட்டுக், கோடையால் தெறப்பட்டு வாடி நின்ற சந்தனமரம்
மழைபெற்றுத் தளிர்த்தாற்போலப், பெரியதோர் கழியுவகை மீதூர அவளை
எய்தினானேபோல, ‘இன்னவிடத்து இத்தன்மைத்து என்னாற் காணப்பட்ட
உரு’ என்னும். அதற்குச் செய்யுள்: 

  ‘அடிவண்ணந் தாமரை ஆடர வல்குல் அரத்தமங்கை
  கொடிவண்ணம் நுண்ணிடை கொவ்வைசெவ்வாய் கொங்கைகோங் 
                                                கரும்பின்
  படிவண்ணஞ் செங்கோற் பராங்குசன் கொல்லிப்1 பனிவரையாய்
  வடிவண்ண வேற்கண்ணி னாலென்னை வாட்டிய வாணுதற்கே
’ ( )

  ‘திருமா முகந்திங்கள் செங்கயல் உண்கண்செம் பொற்சுணங்கேர்
  வருமா முலைமணிச் செப்பிணை வானவன் கானமுன்னக்
  குருமா நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட தென்னன்கன்னிப்
  பெருமான் வரோதயன் கொல்லியஞ் சாரலப்பெண்கொடிக்கே.
’ ( )
 

   (பாடம்) 1. பைம் பூம்பொழில்வாய்.