இனி, நடுங்க நாடுமாறு: நம்புனத்து உதிரமளைந்த கோட்டதோர்
களிறு உண்டு என்னும்; அதற்குச் செய்யுள்:
‘கலவா வயவர் களத்தூர் அவியக்
கனையுதைத்த
கொலையார் சிலைமன்னன் கோன்நெடு மாறன்தென் கூடலன்ன
இலவார் துவர்வாய் மடந்தைநம் ஈர்ம்புனத் தின்றுகண்டேன்
புலவார் குருதி அளைந்தவெண் கோட்டோர் பொருகளிறே’
(71)
‘பொருதிவ் வுலகமெல்
லாம்பொது நீக்கிப் புகழ்படைத்தல்
கருதிவந் தாருயிர் வான்போய் அடையக் கடையல்வென்ற
பருதி நெடுவேற் பராங்குசன் கொல்லிப்பைம் பூம்புனத்துக்
குருதிவெண் கோட்டது கண்டேன் மடந்தையொர் குஞ்சரமே’
‘பண்டிப்
புனத்துப் பகலிடத் தேனலுட்
கண்டிக் களிற்றை அறிவன்மற்-றிண்டிக்
கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய்
உதிர முடைத்திதன் கோடு.’
அது கேட்டுப் ‘பல்காலும் இவ்விடத்து வந்தியங்குவான்
எம்பெருமானாதலான், அவனைக் களிறு ஓர் ஏதஞ்செய்தது கொல்லோ!’
என்று நடுங்குவாளாம். அது கண்டு கூட்டமுண்மை உணரும்.
நாணநாட்டமும் நடுங்கநாட்டமும்
அகத்திணையிலக்கணம்
அன்றென்பது
இவ்வகை உணர்தல் பொருந்தாது, நாணவும் நடுங்கவும் நாடுதல்
அகத்திணை இலக்கணம் அன்றென்க.
என்னை,
“நாணவும்
நடுங்கவும் நாடாள் தோழி
காணுங் காலைத் தலைமகள் தேஎத்து’’
என்பதாகலான்.
அல்லதூஉம், இவள் பெருநாணினளாகலானும் பேரச்சத்
தினளாகலானும் இறந்துபடுமாகலான், அவளேதத்திற்குக்
கவலாளாயினாளுமாம்.
அல்லதூஉம், அவளை அவமதித்துக் கருதினாளுமாம்; அவளது
குறிப்பறியாது உரைத்தலான் ஆசாரம் அறியாளுமாம் என்பது. இக்
குற்றமெல்லாந் தங்கும், அவ்வகை உரைப்பார்க்கு.
முன்னுறவுணர்தல்
மற்றென்னோ உரையெனின், முன்னுறவுணர்தல் என்பது,
இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தபின்றை அவளது வேறுபாடு
|