88இறையனார் அகப்பொருள்

              அறியாள்போன்று நினைவு கேட்டல்

    ‘பொறிகெழு கெண்டை வடவரை மேல்வைத்துப் பூமியெல்லாம்
    நெறிகெழு செங்கோல் நடாநெடு மாறன்நெல் வேலிவென்றான்
    வெறிகமழ் பூங்கன்னிக் கானல் விளையாட் டயரநின்ற
    செறிகுழ லார்பலர் யார்கண்ண தோஅண்ணல் சிந்தனையே’ (109)

    ‘திளையா எதிர்நின்ற தெம்மன்னர் சேவூர்ப் படச்சிறுகண்
    துளையார் கருங்கைக் களிறுந்தி னான்தொண்டிச் சூழ்துறைவாய்
    வளையார் வன்முலை யார்வண்ட லாடும் வரிநெடுங்கண்
    இளையார் பலருளர் யார்கண்ண தோஅண்ணல் இன்னருளே’(110)

என்னும்; என, இதுகேட்டு ஆற்றானாய் நின்று, ‘என் குறை
இன்னார்கண்ணது என்று அறிந்திலள், அறிந்த ஞான்று முடித்துத்தரும்’ என
ஆற்றுவானாவது.

      குறியாள் கூறலும் என்பது - ‘இத்தழை நல்ல, இக்கண்ணி நல்ல,
இவை கொள்ளற்பால’ என்று கையுறை பாராட்டி நின்ற நிலைமைக்கண்,
அவற்றை ஏற்றுக் கொள்ளாது மற்றொன்று சொல்லி நீங்குவது; அதற்குச்
செய்யுள்:

  
  ‘மன்னன் வரோதயன் வல்லத்தொன் னார்கட்கு வான்கொடுத்த
     தென்னன் திருமால் குமரியங் கானல் திரைதொகுத்த
     மின்னுஞ் சுடர்ப்பவ ளத்தரு கேவிரை நாறுபுன்னைப்
     பொன்னந் துகள்சிந்தி வானவிற் போன்றதிப் பூந்துறையே’ (111)

     ‘காரணி சோலைக் கடையல் இடத்துக் கறுத்தெதிர்ந்தார்
     தேரணி தானை சிதைவித்த கோன்கன்னித் தென்துறைவாய்
     நீரணி வெண்முத்தின் ஆய நெடுமணல் மேலிழைத்த
     ஏரணி வண்டல் சிதைக்கின்ற தாலிவ் வெறிகடலே’       (112)

என்பது கேட்டு, ‘இவள் இக்குறை முடியாள், அவத்தமே வருந்தினேன், யான்
சொல்லியது இருப்ப ஏதிலதொன்று சொல்லினமையின்’ என்று
ஆற்றானாயினான், அவ்வாற்றாமை ஆற்றுவதொன்றனைப் பற்றும்,
ஆற்றுவதாவதியாதோ எனின், ‘இவள் பிறிதொன்றிற்குப் புடைகவன்று நின்ற
நிலைமைக்கண் வந்தேன். அல்லாக்கால் மறுமாற்றம் தாராமை இல்லை,
இவள் கவன்றுநில்லா நிலைமைக்கண் வருவென்’ என அந் நசையால்
ஆற்றும்.

       படைத்து மொழி கிளவியும் - என்பது இவன் இத்தழை நல்ல,
இக்கண்ணி நல்ல, இம்முத்து நல்ல, இவை கொள்ளற்பால என்று கையுறை
பாராட்டி நின்ற நிலைமைக்கண் இங்ஙனஞ்