98இறையனார் அகப்பொருள்

  ‘சின்னாள் மறந்திலம் யாமுந்தென் சேவூர்ச் செருமலைந்த
  மன்னாள் செலச்செற்ற வானவன் மாறன்வை யைத்துறைவாய்ப்
  பொன்னார் புனலெம்மை வாங்கும் பொழுதங்கொர் பூங்கணைவேள்
  அன்னான் ஒருவன் அணைந்தெமக் குச்செய்த ஆரருளே.’   (133) 
 

இவையும் அவ்வாறே உரைத்துக்கொள்க.

  ‘காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்
  தாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான்
  நீள்நாக நறும்பைந்தார் தயங்கப்பாய்ந் தருளினாற்
  பூண்ஆகம் உறத்தழீஇப் போதந்தான் அகன் அகலம்
  வருமுலை புணர்ந்தன என்பதனான் என்தோழி
  அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே.’
                                         (கலி. குறிஞ்சி-3)
என, இதுவும் புனல்தரு புணர்ச்சி.

       இனி, உம்மையான் மாறுகோளில்லாக் குறிப்பும் உள எனக்கொள்க.
அக்குறிப்பு நிகழுமாறு; இவளை வினாவாதே அறிவாரை வினாவினவிடத்து,
அறிவார், ‘தெய்வத்தினான் ஆயிற்று’ என்ப; என்றக்கால், தெய்வத்திற்கு
வழிபாடு செய்விப்பான் வேலனைக் கூவி வெறியாட் டெடுத்துக்கொண்டு
வெறியாடுமிடத்து, வேலற்குச் சொல்லுவாளாகச் சொல்லும்; அதற்குச்
செய்யுள்:

                      
வெறி விலக்கல்
 
 
‘வண்டார் இரும்பொழில் வல்லத்துத் தென்னற்கு மாறெதிர்ந்த
  விண்டார் உடலின் மறியறுத் தூட்டி வெறியயர்ந்து
  தண்தார் முருகற் றருகின்ற வேலதண் பூஞ்சிலம்பன்
  ஒண்தா ரகலமும் உண்ணுங்கொ லோநின் உறுபலியே’   (134)

  ‘முருகயர்ந்து வந்த முதுவாய் வேல
  சினவல் ஓம்புமதி வினவுவ துடையேன்
  பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
  சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
  வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய
  விண்தோய் மாமலைச் சிலம்பன்
  தண்தார் அகலமும் உண்ணுமோ பலியே’         (குறுந்-362)


என்பனவற்றால் என் சொல்லப்பட்டதாம்? சிலம்பன் தண்தாரகலமும்
பலியுண்ணுமேல், தக்கது நின்னாற் செயப்படுகின்றது என்றவாறு.
அதுகேட்டுத் தாய், ‘என்சொல்லியவாறோ’ என்னும், அவள் குறிப்பறிதற்கு;
என்றவிடத்து, மேற் சொல்லியவாறே அறத்தொடு நிற்பாளாம். இனித்,
தெய்வம் ஏறியது