னுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வில்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறுவேறு வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட்புலனாகிய வரிவடிவும் உடையவாயின. இதற்கு விதி 'உட்பெறு புள்ளி யுருவா கும்மே' (எழு - 14) என்னுஞ் சூத்திரம் முதலியனவாம். இவற்றாற் பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார். 'எகர ஒகரத் தியற்கையு மற்றே' (எழு - 16) என உயிர்க்குஞ் சிறுபான்மை வடிவு கூறினார். |
இனித் தன்னை உணர்த்தும் ஓசையாவது தன் பிறப்பையும் மாத்திரையையுமே அறிவித்துத் தன்னைப்பெற நிகழும் ஓசை. |
சொற்கு இயையும் ஓசையாவது ஓரெழுத்தொருமொழி முதலியவாய் வரும் ஓசை. |
இனிச் சொல்லென்றது யாதனையெனின், எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன்மையையும் ஒருவன் உணர்தற்கு நிமித்தமாம் ஓசையை. இவ்வுரைக்குப் பொருள் சொல்லதிகாரத்துட் கூறுதும். ஈண்டு 'டறலள' (எழு 23) என்னுஞ் சூத்திர முதலியவற்றான் மொழியாக மயங்குகின்றனவும் அவ்வாக்கத்தின்கண் அடங்குமென்று உணர்க. எழுத்துச் சொற்கு அவயவமாதலின் அதனை முற்கூறி அவயவியாகிய சொல்லைப் பிற்கூறினார். |
இனிப் பொருளென்றது யாதனையெனின் சொற்றொடர் கருவியாக உணரப்படும் அறம் பொரு ளின்பமும் அவற்றது நிலையும் நிலையாமையுமாகிய அறுவகைப்பொருளுமாம். அவை பொருளதிகாரத்துட் கூறுதும். |
வீடு கூறாரோவெனின், அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் வீடுபேற்றிற்கு நிமித்தங் கூறுதலன்றி வீட்டின்தன்மை இலக்கணத்தாற் கூறாரென்றுணர்க. அஃது, |
'அந்நிலை மருங்கி னறமுத லாகிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப.' |
|
(செய்யு - 106) |
என்பதனான் உணர்க. இக்கருத்தானே வள்ளூவனாரும் முப்பாலாகக் கூறி மெய்யுணர்தலான் வீடுபேற்றிற்கு நிமித்தங் கூறினார். |
செந்தமிழ் செவ்வியதமிழ். |
முந்துநூல் அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசை நுணுக்கமும். அவற்றுட் கூறிய இலக்கணக்களாவன எழுத்துச் சொற் பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பனவியலுஞ் சோதிடமும் காந்தருவமுங் கூத்தும் பிறவுமாம். |
புலமென்றது இலக்கணங்களை. |
பனுவலென்றது அவ்விலக்கணங்களெல்லாம் அகப்படச் செய்கின்றதோர் குறியை அவை இதனுட் கூறுகின்ற உரைச் சூத்திரங்களானும் மரபியலானும் உணர்க. |