அவ் விரண்டும், அங்காந்து இயலும் - அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும் என்றவாறு. |
முயற்சி உயிர்க்கிழவன்கண்ணது. அ ஆ என இவற்றின் வேறுபாடு உணர்க. |
(3) |
86. | இ ஈ எ ஏ ஐயென விசைக்கு மப்பா லைந்து மவற்றோ ரன்ன வவைதா மண்பன் முதனா விளிம்புற லுடைய. |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் அப்பாலைந்தும் - இ ஈ எ ஏ ஐ என்று கூறப்படும் அக் கூற்று ஐந்தும், அவற்றோரன்ன - அகர ஆகாரங்கள்போல அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும், அவைதாம் அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய - அவைதாம் அங்ஙனம் பிறக்குமாயினும் அண்பல்லும் அடிநாவிளிம்பும் உறப் பிறக்கும் வேறுபாடுடைய என்றவாறு. |
அண்பல் வினைத்தொகை. எனவே, நாவிளிம்பு அணுகுதற்குக் காரணமான பல்லென்று அதற்கோர் பெயராயிற்று. இ ஈ எ ஏ ஐ என இவற்றின் வேறுபாடு உணர்க. |
(4) |
87. | உ ஊ ஒ ஓ ஒளவென விசைக்கு மப்பா லைந்து மிதழ்குவிந் தியலும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும் அப்பாலைந்தும் - உ ஊ ஒ ஓ ஒள என்று சொல்லப்படும் அக் கூற்று ஐந்தும், இதழ் குவிந்து இயலும் - இதழ் குவித்துக் கூறப் பிறக்கும் என்றவாறு. |
உ ஊ ஒ ஓ ஒள என இவற்றின் வேறுபாடு உணர்க. |
(5) |
88. | தத்தந் திரிபே சிறிய வென்ப. |
|
இது முற்கூறிய உயிர்க்கும் மேற்கூறும் மெய்க்கும் பொதுவிதி கூறிச் சிங்கநோக்காகக் கிடந்தது. |