பிறப்பியல்103

இதன் பொருள்: தத்தந்   திரிபே   சிறிய   என்ப  -   உயிர்களும்
மெய்களும்   ஒவ்வொரு    தானங்களுட்    பிறப்பனவற்றைக்    கூட்டிக்
கூறினேமாயினும் நுண்ணுணர்வான் ஆராயுமிடத்துத் தம்முடைய தம்முடைய
வேறுபாடுகள் சிறியவாக உடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு,
 

அவை  எடுத்தல்   படுத்தல்   நலிதல்   விலங்கல்   என்றவாற்றானுந்
தலைவளி   நெஞ்சுவளி    மிடற்றுவளி    மூக்குவளி   என்றவாற்றானும்
பிறவாற்றானும்  வேறுபடுமாறு  நுண்ணுணர்வுடையோர்  கூறி  உணர்க. ஐ
விலங்கலுடையது.     வல்லினந்       தலைவளியுடையது.    மெல்லினம்
மூக்குவளியுடையது. இடையினம்   மிடற்றுவளியுடையது. ஏனையவுங் கூறிக்
கண்டு உணர்க.
 

(6)
 

89.

ககார ஙகார முதனா வண்ணம்.
 

இது மெய்களுட் சிலவற்றிற்குப் பிறப்புக் கூறுகின்றது.
 

இதன் பொருள்: ககார  ஙகாரம்  முதல்  நா  அண்ணம் - ககாரமும்
ஙகாரமும் முதல் நாவும் முதல் அண்ணமும் உறப் பிறக்கும் என்றவாறு.
 

உயிர்மெய்யாகச்   சூத்திரத்துக்    கூறினுந்   தனிமெய்யாகக்   கூறிக்
காண்க.  முதலை  இரண்டிற்குங்  கூட்டுக. க ங என இவற்றின்  வேறுபாடு
உணர்க.
 

(7)
 

90.

சகார ஞகார மிடைநா வண்ணம்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள்: சகார  ஞகாரம்   இடைநா  அண்ணம் - சாகரமும்
ஞகாரமும் இடைநாவும் இடையண்ணமும் உறப் பிறக்கும் என்றவாறு.
 

இடையை  இரண்டிற்குங்  கூட்டுக.  ச  ஞ  என  இவற்றின் வேறுபாடு
உணர்க.
 

(8)
 

91.

டகார ணகார நுனிநா வண்ணம்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள்: டகார  ணகாரம்  நுனி  நா அண்ணம் - டகாரமும்
ணகாரமும் நுனிநாவும் நுனியண்ணமும் உறப்பிறக்கும் என்றவாறு.