94. | அணரி நுனிநா வண்ண மொற்ற றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: நுனி நா அணரி அண்ணம் ஒற்ற - நாவினது நுனி மேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தீண்ட, றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் - றகார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும் என்றவாறு. |
இது முதலாக நெடுங்கணக்கு முறையன்றி நாவதிகாரம் பற்றிக் கூறுகின்றார். |
ற ன என இவற்றின் வேறுபாடு உணர்க. |
(12) |
95. | நுனிநா வணரி யண்ணம் வருட ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: நுனி நா 1அணரி அண்ணம் வருட - நாவினது நுனி மேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் - ரகார ழகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும் என்றவாறு. |
ர ழ என இவற்றின் வேறுபாடு உணர்க. |
(13) |
96. | நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற வாவயி னண்ண மொற்றவும் வருடவும் லகார ளகார 2மா யிரண்டும் பிறக்கும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: நா வீங்கி விளிம்பு அண்பல் முதலுற - நா மேனோக்கிச் சென்று தன் விளிம்பு அண்பல்லி னடியிலே உறாநிற்க, ஆவயின் அண்ணம் ஒற்ற லகாரமாய் - அவ்விடத்து அவ் வண்ணத்தை அந் நாத் தீண்ட லகாரமாயும், ஆவயின் அண்ணம் வருட ளகாரமாய் - அவ்விடத்து அவ் |
|
1. அணருதல் - மேனோக்கிச் சேறல், அணரி - மேனோக்கிச் சென்று. |
2. அவ்விரண்டும் என முன்போற் கூறலே பொருத்தம். |