பிறப்பியல்107

ணத்தை   அணைந்து    உரலாணி   இட்டாற்போலச்   செறிய,  யகாரம்
பிறக்கும் - யகாரவொற்றுப் பிறக்கும் என்றவாறு.
 

1ஆணி - மரம். ய என வரும்.
 

(17)
 

100.

மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ்
சொல்லிய பள்ளி நிலையின வாயினு
மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்.

  

இது மெல்லெழுத்திற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள்: மெல்லெழுத்து ஆறும் பிறப்பின்  ஆக்கஞ் சொல்லிய
2பள்ளி  நிலையின   ஆயினும் -  மெல்லெழுத்துக்கள்   ஆறுந்   தத்தம்
பிறப்பினது  ஆக்கஞ்   சொல்லிய   இடத்தே   நிலை  பெற்றனவாயினும்,
மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும் - ஓசை  கூறுங்கால்  மூக்கின்கண்
உளதாகிய வளியினிசையான் யாப்புறத் தோன்றும் என்றவாறு.
 

அவை  அங்ஙனமாதல்   கூறிக்   காண்க.    யாப்புற   என்றதனான்
இடையினத்திற்கு   மிடற்றுவளியும்     வல்லினத்திற்குத்    தலைவளியுங்
கொள்க.
 

(18)
 

101.

சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப் படுத்த வேனை மூன்றுந்
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
யொத்த காட்சியிற் றம்மியல் பியலும்.

 

இது சார்பிற்றோற்றங்கள் பிறக்குமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்: சார்ந்து  வரின்  அல்லது  -  சில  எழுத்துக்களைச்
சார்ந்து  தோன்றினல்லது,   தமக்கு   இயல்பு   இல  என - தமக்கெனத்
தோன்றுதற்கு   ஓரியல்பிலவென்று,   தேர்ந்து  வெளிப்படுத்த  தம்மியல்பு
மூன்றும்  - ஆராய்ந்து  வெளிப்படுக்கப்பட்ட   எழுத்துக்கள்  தம்முடைய
பிறப்பியல்பு மூன்றினையுங் கூறுங்கால், தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி


1. ஆணி  என்றது - உரலின்  அடித்துவாரத்தை மறைக்கும் படி இடும்
மரத்தை.
 

2.பள்ளி - இடம்.