118புணரியல்

1அடையாவன,       உம்மைத்தொகையும்         இருபெயரொட்டுப்
பண்புத்தொகையுமாம்.
 

உதாரணம்:        பதினாயிரத்தொன்று        ஆயிரத்தொருபஃது
பதினாயிரத்திருபஃது  என  வரும்.    இவ்வடைகள்    ஒருசொல்லேயாம்.
2வேற்றுமைத் தொகையும் உவமைத் தொகையும் முடியப் பண்புத்தொகையும்
வினைத்தொகையும்   பிளந்து    முடியாமையின்    ஒரு   சொல்லேயாம்.
அன்மொழித்  தொகையுந்   தனக்கு   வேறோர்   முடிபின்மையின்  ஒரு
சொல்லேயாம். இத் தொகைச் சொற்களெல்லாம்  அடையாய் வருங்காலத்து
ஒரு   சொல்லாய்    வருமென்று   உணர்க.  உண்டசாத்தான்   வந்தான்,
உண்டுவந்தான் சாத்தன் என்பனவும் ஒருசொல்லேயாம்.
 

(8)
 

111.

3மருவின் றொகுதி மயங்கியன் மொழியு
முரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே.
 

இது மரூஉச்சொற்களும் புணர்ச்சிபெறு மென்பதூஉம் நிறுத்த சொல்லுங்
குறித்துவரு கிளவியுமாய்ப் பொருளியை


1. பதினாயிரத்தொன்று.  இதில்   பதினாயிரம்    என்புழி    ஆயிரம்
பத்தென்னும் அடையொடு தோன்றிற்று; இது பண்புத்தொகை.  பன்னிரண்டு
கை. இதில்  இரண்டு  பத்தென்னு  மடையொடு   வந்தது.  பன்னிரண்டு -
பத்தும்  இரண்டும்   என  உம்மைத்தொகை.  இதுபற்றியே  அடையாவன
இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் உம்மைத்தொகையும் என்றார்.

 

2. வேற்றுமைத் தொகையும்  உவமைத் தொகையும்   முடிய   என்றது,
பிளந்து  முடிவுபெற  என்றபடி.  என்றது,  குன்றக்கூகை,  புலிப்பாய்த்துள்
என்புழி  குன்றம்+கூகை   எனவும்,   புலி+பாய்த்துள்    எனவும்  பிளந்து
புணர்ச்சிபெற,      வினைத்தொகையும்     பண்புத்தொகையும்   பிளந்து
முடிவுபெறாது ஒரு சொல்லாயே  நிற்றலின்   அவை   அடையெனப்படும்.
அன்மொழித்   தொகையும்    தனக்கு     வேறோர்    முடிபின்மையின்
ஒருசொல்லேயாம்   என்றது   ஏனைய   தொகைகளினீற்றிற்  பிறத்தலின்,
அவற்றின்  முடிபே  தனக்கு  முடிபன்றி  வேறோர்  முடியின்மையின் ஒரு
சொல்லேயாம்.  எனவே  தான்  பிளந்து  நின்று  முடிவுபெறாது.  பெறின்
அன்மொழிப் பொருளுணர்த்தாது என்றபடி.
 

3. மருவின் தொகுதியும் மயங்கியன் மொழியும் எனப் பிரித்துப்பொருள்
கூறினும்,  நச்சினார்க்கினியர்   கருத்தின்படி   பொருள்  கூறலாம்.  அவர்
இன்றொகுதியெனப் பிரித்துப் பொருள் கோடல் சிறப்பின்று. உரையாசிரியர்
கருத்தே ஈண்டுப் பொருத்தமாம்.  ஏனெனின்? ஆசிரியர் இலக்கணத்தோடு
பொருந்திய மரூஉச் சொற்களைப் பிரித்துப் புணர்த்தலின்.