பின்னர் வேதவியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராதலின். |
முற்கூறிய நூல்கள்போல எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமும் மயங்கக் கூறாது வேறோர் அதிகாரமாகக் கூறினாரென்றற்கு 'எழுத்து முறைகாட்டி' யென்றார். |
வரைப்பின்கண்ணே தோற்றி நிறுத்தவென்க. |
இந்திரனாற் செய்யப்பட்டது ஐந்திர மென்றாயிற்று. |
பல்புகழாவன, ஐந்திரநிறைதலும் அகத்தியத்தின் பின் இந்நூல் வழங்கச் செய்தலும் அகத்தியனாரைச் சபித்த பெருந்தன்மையும் ஐந்தீநாப்பண் நிற்றலும் நீர்நிலை நிற்றலும் பிறவுமாகிய தவத்தான் மிகுதலும் பிறவுமாம். |
படிமை தவவேடம். |
'வடவேங்கடந் தென்குமரி' என்பது கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்த சொற்சீரடி. 'ஆயிடை' என்பது வழியசை புணர்ந்த சொற்சீரடி. 'தமிழ்கூறு நல்லுலகத்து' என்பது முட்டடியின்றிக் குறைவு தீர்த்தாய சொற்சீரடி. இங்ஙனம் சொற்சீரடியை முற்கூறினார், சூத்திர யாப்பிற்கு இன்னோசை பிறத்தற்கு. என்னை ? 'பாஅ வண்ணஞ், சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்' (செய்யுளியல் - 214) என்றலின். ஏனையடிகளெல்லாஞ் செந்தூக்கு. |
வடவேங்கடந் தென்குமரியெனவே எல்லையும், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடியெனவே நுதலியபொருளும் பயனும் யாப்பும், முந்து நூல் கண்டெனவே வழியும், முறைப்பட வெண்ணியெனவே காரணமும், பாண்டிய னவயத்தெனவே காலமுங் களனும், அரிறபத் தெரிந்தெனவே கேட்டோரும், தன்பெயர் தோற்றியெனவே ஆக்கி யோன்பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன. |
தொல்காப்பியமென்பது மூன்று உறுப்படக்கிய பிண்டம். பொருள் கூறவே அப்பொருளைப் பொதிந்த யாப்பிலக்கணமும் அடங்கிற்று. நூறு 1காணங் கொணர்ந்தானென்றால் அவை பொதிந்த கூறையும் அவையென அடங்குமாறுபோல. |
இனி, இவ்வாறன்றிப் பிறவாறு கண்ணழிவு கூறுவாரும் உளரா லெனின், வேங்கடமுங் குமரியும் எல்லையாகவுடைய நிலத்திடத்து வழங்குந் தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்கள் வழக்குஞ் செய்யுளு மென்றாற் செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டினும் வழங்குந் தமிழ்மொழியினைக் கூறுவாரை நன்மக்க ளென்றாரென்று பொருடருதலானும், அவர் கூறும் வழக்குஞ் செய்யுளுங் கொண்டு எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்தல் பொருந்தாமையானும், அவர் கூறும் வழக்குஞ் செய்யுளுமாகிய |
|
1. காணம் - பொற்காசு. |