120புணரியல்

போல  நின்றது.  'தெய்வ  மால்வரைத்  திருமுனி   யருளால்'  என்புழித்
தெய்வவரை   யென்று    ஒட்டித்   தெய்வத்தன்மையுடைய  வரையெனப்
பொருள்தருகின்றது,    இன்னோசை      தருதற்கு   மாலென்பதனோடும்
ஒட்டினாற்போலக் குறைந்து நின்றது. மூன்று  திரிபும்  வந்தவாறு  காண்க.
இனி எச்சத்தின்கண்ணும்,
 

'பொன்னோடைப் புகரணிநுதற்
றுன்னருந்திறற் கமழ்கடா அத்து
எயிறுபடை யாக வெயிற்கத விடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயா'

(புறம் - 3)
 

என   மாட்டாய்  ஒட்டிநின்றது   கயிறுபிணிக்கொண்ட   என்பதனோடும்
ஒட்டினாற்போல   நின்று  ஒற்றடுத்தது  இன்னோசை   பெறுதற்கு.   பிற
சான்றோர்   செய்யுட்கண்   இவ்வாறும்   பிறவாறும்   புணர்ச்சியில்வழிப்
புணர்ச்சிபெற்றாற்போல நிற்பன   எல்லாவற்றிற்கும்   இதுவே   ஓத்தாகக்
கொள்க.
 

(9)
 

112.

வேற்றுமை குறித்த புணர்நிலை மொழியும்
வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையு
மெழுத்தே சாரியை யாயிரு பண்பி
னொழுக்கல் வலிய புணருங் காலை.
 

இது மூவகைத்  திரிபினுள்   மிக்குப்  புணரும்  புணர்ச்சி  இருவகைய
என்கின்றது.
 

இதன் பொருள்:      புணருங்காலை - நால்வகைப்    புணர்ச்சியுள்
மிக்கபுணர்ச்சி புணருங்காலத்து, வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் -
வேற்றுமைப் பொருண்மையினைக் குறித்த  புணர்மொழியினது  தன்மையும்,
வேற்றுமை  அல்வழிப்   புணர்மொழி    நிலையும் -  வேற்றுமையல்லாத
அல்வழியிடத்துப் புணரும்  மொழியினது  தன்மையும்,  எழுத்தே  சாரியை
ஆயிரு  பண்பின்   ஒழுக்கல்   வலிய - எழுத்து   மிகுதலுஞ்   சாரியை
மிகுதலுமாகிய   அவ்விரண்டு   குணத்தினானுஞ்   செல்லுதலைத்  தமக்கு
வலியாகவுடைய என்றவாறு.