வாட்கு வாட்கண் எனத்திரிந்து முடிவனவுங் கொள்க. இதனானே அவன்கண் அவள்கண் என உயர்திணைப்பெயர்க்கண் ஏழனுருபு இயல்பாய் வருதலுங் கொள்க. இவற்றிற்குக் குன்றிய புணர்ச்சிவருமேனுங் கொள்க. |
கொற்றிக்கு கொற்றிகண் கோதைக்கு கோதைகண் என விரவுப்பெயர்க்கும் இதனானே கொள்க. |
(12) |
115. | ஆற னுருபி னகரக் கிளவி யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும். |
|
இஃது ஆறாவதற்குத் தொகைமரபை நோக்கியதோர் கருவி கூறுகின்றது. |
இதன் பொருள் : ஆறனுருபின் அகரக்கிளவி - அது வென்னும் ஆறனுருபின்கணின்ற அகரமாகிய எழுத்து, ஈறாகு அகரமுனைக் கெடுதல்வேண்டும் - நெடுமுதல் குறுகு மொழி கட்கு 'ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும்' (எழு - 161) என விதித்ததனால் உளதாகிய அகரத்தின் முன்னர்த்தான் கெடுதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. |
தமது நமது எமது நுமது தனது எனது நினது என வரும். இது நிலைமொழிக்கு ஓர் அகரம் பெறுமென விதியாது உருபு அகரம் ஏறி முடியுமென விதித்தால் வரும் குற்றம் உண்டோவெனின், 1'நினவ கூறுவ லெனவ கேண்மதி' (புறம் - 35) என்றாற்போல ஆறாவதற்கு உரிய அகர உருபின் முன்னரும் ஓர் அகர எழுத்துப்பேறு நிலைமொழிக்கண் வருதலுளதாகக் கருதினாராதலின், ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் பொதுவாக நிலைமொழிக்கண் அகரப்பேறு விதித்து, அதுவென்னும் ஒருமையுருபு வந்தால் ஆண்டுப்பெற்று நின்ற அகரத்தின் முன்னர் அதுவென்பதன்கண் அகரங்கெடுகவென்று ஈண்டுக் கூறினாராதலின் அதற்குக் குற்றம் உண்டென்று உணர்க. |
(13) |
|
1. நினைவ எனவ என்புழி நின் என் என்பன அகர உருபு வருங்கால் இடையில் ஓரகரம் பெற்று நின என என்று நின்று பின்அகரவுருபோடு சேர்ந்து நினவ எனவ என நிற்றல் காண்க. அதுபற்றியே "ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்' என்றார் என்பது கருத்து. |