116. | வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. |
|
இது வேற்றுமை பெயர்க்கண் நிற்குமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: வேற்றுமை பெயர்வழிய - வேற்றுமைகள் பெயரின் பின்னிடத்தனவாம், புணர்நிலை - அவற்றோடு புணரும் நிலைமைக்கண் என்றவாறு. |
உதாரணம்: சாத்தனை சாத்தனொடு சாத்தற்கு சாத்தனின் சாத்தனது சாத்தன்கண் எனவரும். மற்று இது 'கூறிய முறையின்' (சொ - 69) என்றும் வேற்றுமையோத்திற் சூத்திரத்தாற் பெறுதுமெனின், பெயரொடு பெயரைப் புணர்த்தல் முதலிய நால்வகைப் புணர்ச்சியினையும் வேற்றுமை அல்வழியென இரண்டாக அடக்குதலிற் றொழிற்பின்னும் உருபு வருமென எய்தியதனை விலக்குதற்கு ஈண்டுக் கூறினாரென்க. ஆயின் இவ் விலக்குதல் வினையியன் முதற் சூத்திரத்தாற் பெறுதுமெனின், அது 1முதனிலையைக் கூறிற்றென்பது ஆண்டு உணர்க. |
(14) |
117. | உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென் றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே. |
|
இது முற்கூறிய பெயர்கட்குப் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. |
இதன் பொருள்: சுட்டுநிலைப்பெயர் - பொருளை ஒருவர் கருதுதற்குக் காரணமான நிலைமையையுடைய பெயர்களை, உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று ஆயிரண் டென்ப - உயர்திணைப் பொருளே ஒருவன் கருதுதற்குக் காரணமான பெயரும் அஃறிணைப் பொருளை ஒருவன் கருதுதற்குக் காரணமான பெயரும் என்னும் அவ்விரண்டென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
|
1. முதனிலையென்றது பகுதியை. பகுதிக்கன்று வினைச்சொற்கே கூறினாரென்றலே பொருத்தமாம். ஏனெனின்? இலக்கணம் கூறும்வழிக் கூறாதொழியின் ஐயம்வருமென்று, வினையியலில் 'வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது' என்று கூறினார். உய்த்துணர்ந் திடர்ப்படாமல் ஈண்டுக் கூறினாரென்று கோடலே பொருத்தமாதலின். |