புணரியல்135

சாரியை   இறுதி   மகரமின்றி  முடிதலை வேண்டுமென்று கூறுவர் புலவர்
என்றவாறு.
 

உதாரணம்: புளியஞெரி   நுனி   முரி   யாழ் வட்டு   என  வரும்.
உரையிற்கோடலென்பதனாற் புளியவிலையென உயிர் வருவழி ஈறுகெடுதலும்
புளியிலையென   அம்மு  முழுவதுங்   கெடுதலுங்  கொள்க.  புளியவிலை
யென்றது '1ஒட்டுதற் கொழுகிய வழக்கு' (எழு - 132) அன்று. மென்கணமும்
இடைக் கணமும் உயிர்க்கணமுந் தம்முளொக்குமேனும்  அம்மு  முழுவதுங்
கெட்டுவருதலின்   உயிரை   எடுத்தோதாராயினார்.   புளிங்காய்  என்பது
மருமுடிபு.
 

(28)
 

131.

இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்
கின்னென் சாரியை யின்மை வேண்டும். 

 

இஃது இன்சாரியை ஐந்தாமுருபின்கண் முழுவதுங் கெடுமென்கின்றது.
 

இதன் பொருள்: இன்னென   வரூஉம்     வேற்றுமை   யுருபிற்கு -
இன்னென்று   சொல்ல வருகின்ற வேற்றுமை யுருபிற்கு, இன்னென் சாரியை
இன்மை  வேண்டும் - இன்னென்னுஞ்   சாரியை   தான் இன்றி முடிதலை
விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
 

உதாரணம்: விளவின்  பலாவின் கடுவின் தழுவின் சேவின் வௌவின்
எனவரும்.   இவற்றிற்கு   வீழ்பழமெனவும்   நீங்கினானெனவுங் கொடுத்து
முடிவுணர்க.   ஊரினீங்கினான்   என  ஏனையவற்றோடும்  ஒட்டுக.  இனி
'அவற்றுள்   இன்னி   னிகரம்'   (எழு - 120)   என்றதன்பின்   இதனை
வையாத முறையன்றிக் கூற்றினான் இன்சாரியை கெடாது வழக்கின்கண்ணுஞ்
செய்யுட்கண்ணும் நிற்றல்கொள்க. பாம்பினிற் கடிதுதேள் 'கற்பினின் வழாஅ
நற்பல வுதவி' 'அகடுசேர்பு பொருந்தி யளவினிற் றிரியாது' எனவரும். இனி
இன்மையும் வேண்டு மென்னும்  உம்மை  தொக்குநின்றதாக்கி   அதனான்
இவை கோடலும் ஒன்று.
 

(29)

1. ஒட்டுதற் கொழுகிய வழக்கன்று - சாரியைகள்  வருதற்குரிய  மொழி
வழக்கன்று. அடுத்த 30 - ம் சூத்திரம் பார்க்க.