பான்மை யென்றற்கு இயலுமென்றார். பூவினொடு விரிந்த கூந்தல் பூவொடு விரிந்த கூந்தல் என உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒத்தது. இனி இயற்கை யென்றதனான் ஒடு உருபின்கட் பெற்றும் பெறாமையும் வருதலன்றிப் பெற்றே வருதலுங் கொள்க. பலவற்றொடு என வரும். |
(30) |
133. | அத்தே வற்றே யாயிரு மொழிமே லொற்றுமெய் கெடுத றெற்றென் றற்றே யவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. |
|
இஃது அத்து வற்று என்பனவற்றிற்கு நிலைமொழியது ஒற்றுக்கேடும், வருமொழி வன்கணத்துக்கண் ஒற்றுப்பேறுமாகிய செய்கை கூறுகின்றது. |
இதன் பொருள்: அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் ஒற்று - அத்தும் வற்றுமாகிய அவ்விரண்டு சாரியைமேல் நின்ற ஒற்று, மெய்கெடுதல் தெற்றன்றற்று - தன்வடிவு கெடுதல் தெளியப்பட்டது, அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே - அவ்விரு சாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம்: கலத்துக்குறை, அவற்றுக்கோடு எனவரும். 'அத்திடை வரூஉங் கலமெ னளவே' (எழு - 168) 'சுட்டுமுதல் வகர மையு மெய்யும்' (எழு - 183) என்பன வற்றான் அத்தும் வற்றும் பெற்றுவரும் மகர வகர ஈறுகட்கு 1ஈற்று வல்லெழுத்துவிதி இன்மையின் அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமென்று சாரியை வல்லெழுத்து விதித்தார். வல்லெழுத்து இன்றித் திரிந்து முடிவன ணகாரமும் னகாரமும் லகாரமும் ளகாரமுமாம். மகர ஈற்றிற்கு அத்தும் வகர ஈற்றிற்கு வற்றும் வருமென்பது அச் சூத்திரங்களாற் பெற்றாம். வற்றே யத்தே யென்னாத முறையன்றிக் கூற்றினாற் |
|
1. ஈற்று வல்லெழுத்து விதியில்லாதது என்றது கலம், அவ் என்னும் நிலைமொழிகளின் ஈற்றெழுத்துக்கள் ஒற்றாதலினாலே வல்லினம் மிகா; உயிராயின் மிகும். ஆதலின் விதியில்லை என்றபடி. |