உதாரணம் : விள பலா கிளி குரீ கடு பூ சே கை சோ கௌ என நிறுத்தி, ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது என மெய்ம்முதன்மொழி வருவித்து, பொருள் தருதற்கு ஏற்பன அறிந்து கூட்டுக. சோ என்பது அரண். அதற்குச் சோ ஞொள்கிற்று எனக் கொள்க. கௌவென்பதற்குக் கௌஞெகிழ்ந்தது நீடிற்று என்க. இனி இவற்றின் முன்னர் உயிர்முதன்மொழி வருங்கால் அழகிது ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊறிற்று எழுந்தது ஏய்ந்தது ஐது ஒன்று ஓங்கிற்று ஒளவியத்தது என வரும். இவற்றுட் சோவுக்கு இடிந்தது ஈண்டையது உள்ளது ஊறிற்று என்பனவற்றோடு முற்கூறியவற்றையும் ஒட்டுக. கௌவுக்கு ஈண்டையது ஊக்கத்தது என்பவற்றோடு முற்கூறியவற்றையுமொட்டுக. இனி வேற்றுமைக்கண் விள முதலியவற்றை நிறுத்தி ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஆக்கம் இளமை ஈட்டம் உயர்வு ஊற்றம் எழுச்சி ஏற்றம் ஐயம் ஒழிவு ஓக்கம் ஒளவியம் என ஒட்டுக. ஏலாதனவற்றிற்கு முற்கூறியவாறுபோல ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. |
உதாரணம் : உரிஞ் வெரிந் என நிறுத்தி, ஞெகிழ்ந்தது நீடிற்று அழகிது ஆயிற்று எனவும், ஞெகிழ்ச்சி நீட்டிப்பு அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்றோடும் ஒட்டுக. மரம் வேய் வேர் யாழ் என நிறுத்தி, ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது அழகிது ஆயிற்று எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்றோடும் ஒட்டுக. இவற்றுள் மகர ஈறு வேற்றுமைக்கட் கெடுதல் 'துவர' (எழு - 310) என்றதனாற் கொள்க. அல்வழிக்கட் கெடுதல் 'அல்வழியெல்லாம்' (எழு - 314) என்றதனாற் கொள்க. நிலைமொழித் திரிபு ஈண்டுக் கொள்ளாமை உணர்க. யகர ஈறு யகரத்தின்முன்னர் இரண்டிடத்துங் கெடுதல் ஈண்டு எல்லாமென்றதனாற் கொள்க. வேல் தெவ் கோள் என நிறுத்தி ஏற்பன கொணர்ந்து இரு |