148தொகைமரபு

வழியும் ஒட்டுக.  ணகார  லகார  ளகார  னகாரங்களின்  முன்னர்  நகரம்
வருமொழியாக    வந்துழி      அந்நகரந்     திரிதலின்     அத்திரிந்த
உதாரணங்கள்  ஈண்டுக்   கொள்ளற்க.  இவற்றுள்  திரிந்து  வருவனவுள;
அவை     1எடுத்தோத்தானும்      இலேசானும்    ஏனையோத்துக்களுள்
முடிக்கின்றனவாற்றான்    உணர்க.     இனி,   எல்லாவழியுமென்றதனான்
உயிர்க்கணமாயின்   ஒற்றிரட்டியும்  உடம்படு  மெய்பெற்றும்  உயிரேறியும்
முடியுங்   கருவித்திரிபுகள்    திரிபெனப்படா  இவ்வியல்பின்கண்ணென்று
உணர்க.  வரகுஞான்றது   வரகுஞாற்சி   எனக்  குற்றுகரத்தின்  கண்ணும்
இவ்வாறே   கொள்க.    இருபத்துநான்கு    ஈற்றிற்கும்   வேற்றுமைக்கும்
அல்வழிக்கும்    அகத்தோத்தினுள்    நாற்பத்தெட்டுச்   சூத்திரங்களான்
முடிவனற்றை ஒரு  சூத்திரத்தாற்றொகுத்து  முடித்தார்.  மேலும் இவ்வாறே
கூறுப. இவ்வியல்பு வருமொழி நோக்கிக் கூறியதென்று உணர்க. இவ்வியல்பு
புணர்ச்சி  மெய்க்கண்   நிகழுமாறு   உயிர்க்கண்   நிகழாமையின்  மெய்
முற்கூறினார்.
 

(2)
 

145.

அவற்றுள்
மெல்லெழுத்தியற்கையுறழினும்வரையார்
சொல்லிய தொடர்மொழி யிறுதி யான. 
 

இது முற்கூறிய முடிபிற் சிலவற்றிற்கு அம்முடிபு விலக்கிப்  பிறிது  விதி
எய்துவித்தது.
 

இதன் பொருள்அவற்றுள்  -   முற்கூறிய   மூன்று  கணத்தினுள்,
மெல்லெழுத்தியற்கை   உறழினும்     வரையார்    -     மெல்லெழுத்து
இயல்பியல்பாதலேயன்றி   உறழ்ந்து    முடியினும்   நீக்கார்,   சொல்லிய
தொடர்மொழி  இறுதியான -  சொல்லப்பட்ட  தொடர்மொழி  யீற்றுக்கண்
என்றவாறு.


1. எடுத்தோத்து   என்றது   சூத்திரத்தை,   விதிகளை எடுத்தோதுவது
என்பது கருத்து.    இலேசு   என்றது    மிகை    முதலியவற்றை.  இனி
எல்லாம்என்றதனால்  உயிர்க்கணமாயி   னொற்றிரட்டியும்   உடம்படுமெய்
பெற்றும்   உயிரேறியும்    முடியுங்    கருவித்திரிபுகள்   திரிபெனப்படா இவ்வியல்பின்கண்   என்று      உணர்க      என     ஓதினமையானே
கருவித்திரிபினதும், செய்கையினதும் வேறுபாடு இனிது அறியப்படும்.