தொகைமரபு149

உம்மை எதிர்மறை. எனவே, உறழாமை வலியுடைத்தாயிற்று. கதிர்ஞெரி
கதிர்ஞ்ஞெரி நுனி முரி  எனவும்,   இதழ்ஞெரி   இதழ்ஞ்ஞெரி நுனி முரி
எனவும்   வரும்.   வருமொழி  முற்கூறியவதனால்  ஓரெழுத்தொருமொழி
ஈரெழுத்தொரு மொழிகளுள்ளுஞ்  சில   உறழ்ச்சிபெற்று முடிதல் கொள்க.
பூஞெரி  பூஞ்ஞெரி  நுனி  முரி 1காய்ஞெரி  காயஞ்ஞெரி  நுனிமுரி  என
வரும்.     சொல்லியவென்றதனான்     ஓரெழுத்தொருமொழிகளுட்   சில
மிக்குமுடிதல் கொள்க. கைஞ்ஞெரித்தார்  நீட்டினார்  மறித்தார்  எனவரும்.
இன்னும்   இதனானே   ஈரெழுத்தொரு   மொழிக்கண்   மெய்ஞ்ஞானம்
நூல்மறந்தார்   என   வரும்.   இவற்றை   நலிந்து   கூறப்  பிறத்தலின்
இயல்பென்பாரும் உளர். பூஞாற்றினார் என்றாற்போல்வன மிகாதன.
 

(3)
 

146.

ணனவென் புள்ளிமுன் யாவு ஞாவும்
வினையோ ரனைய வென்மனார் புலவர்.

 

இது யகர ஞகர  முதன்மொழிவந்த   இடத்து   நிகழ்வதோர்  தன்மை
கூறுகின்றது. இதுவும் புணரியலொழிபாய்க் கருவிப்பாற்படும்.
 

இதன் பொருள்: ணனவென்  புள்ளிமுன்  யாவும்  ஞாவும் - ணகார
னகாரமென்று கூறப்படும்  புள்ளிகளின்  முன்னர் வந்த   யாவும்  ஞாவும்
முதலாகிய  வினைச்சொற்கள்,  வினையோரனைய   என்மனார்  புலவர் -
ஒருவினைவந்த தன்மையை ஒக்குமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
 

உதாரணம் : 'மண்யாத்த கோட்ட  மழகளிறு தோன்றுமே' 'மண்ஞாத்த
கோட்ட  மழகளிறு   தோன்றுமே'   எனவும்,   'பொன்யாத்த தார்ப்புரவி
பரிக்குமே' 'பொன்ஞாத்த தார்ப்புரவி பரிக்குமே' எனவும் வரும். 


1. காய் மெய் என்னுமொழிகளை இங்கே  ஈரெழுத்தொரு மொழியென்று
கொண்ட நச்சினார்க்கினியர்  'ஓரெழுத்தொருமொழி  ஈரெழுத்தொருமொழி'
என்னுஞ்சூத்திரத்து   இவை   முதலியவற்றை   ஒற்றுத்   தள்ளிக்கொள்ள
வேண்டுமென்றது அவருக்கேயுடன்பாடன்மையைக்  காட்டும்.  எழுத்தியல்பு
நோக்கி  ஈண்டுக்  கூறினாரெனின்?  ஆண்டும்  அவ்வாறே   கூறிவிடுதல்
பொருத்தமென்பது அவர்க்கு முடன்பாடாதல் காண்க.