வினைக்கண்ணெனவே மண்யாமை மண்ஞாமை எனப்பெயர்க்கண் வாராவாயின. ஞாமுற்கூறாது யாமுற்கூறியவதனான் ஞாச்சென்றவழி யாச்செல்லாது யாச்சென்றவழி ஞாச்செல்லுமென்று கொள்க. மண்ஞான்றது என்றவழி மண்யான்றது என்று வராமை உணர்க. |
(4) |
147. | மொழிமுத லாகு மெல்லா வெழுத்தும் வருவழி நின்ற வாயிரு புள்ளியும் வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே. |
|
இது ணகார ஈறும் னகார ஈறும் அல்வழிக்கண் இயல்பாய் முடியுமென்கின்றது. |
இதன் பொருள்: மொழிமுதலாகும் எல்லாவெழுத்தும் வருவழி - மொழிக்கு முதலாமெனப்பட்ட இருபத்திரண்டெழுத்தும் வருமொழியாய் வருமிடத்து, நின்ற ஆயிரு புள்ளியும் - முன்னர்க் கூறிநின்ற ணகாரமும் னகாரமும், வேற்றுமை யல்வழித் திரிபிடன் இலவே - வேற்றுமை யல்லாத இடத்துத் திரியுமிடம் இல என்றவாறு. |
மண் பொன் என நிறுத்திக், கடிது சிறிது தீது பெரிது ஞெகிழ்ந்தது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது அடைந்தது ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊட்டிற்று எவ்விடத்தது ஏறிற்று ஐது ஒழுகிற்று ஓங்கிற்று ஒளவையது என ஒட்டுக. வருமொழி முற்கூறியவதனால் ணகாரத்திற்குச் சிறுபான்மை திரிபும் உண்டென்று கொள்க. சாட்கோல் என வரும் ; இதற்குச் சாணாகியகோ லென்க. இவை 'நின்ற சொன்மு னியல்பாகும்' (எழு - 144) என்றவழி அடங்காவாயின ; அது வருமொழிபற்றித் திரியாமை கூறியதாதலின். இது நிலைமொழிபற்றித் திரியாமை கூறியது. |
(5) |
148. | வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி மேற்கூ றியற்கை யாவயி னான. |
|
இது முற்கூறியவாற்றான் வேற்றுமைக்கண் திரிபு எய்தி நின்றவற்றை ஈண்டு வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத் தல் வழித் திரியாவென எய்தியது விலக்கிற்று. |