152தொகைமரபு

உதாரணம் : மண்டீது மண்ணன்று  முஃடீது  முண்ணன்று என வரும்.
நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப.
 

(8)
 

151.

உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியு
மியல்பா குநவு முறழா குநவுமென்
றாயீ ரியல வல்லெழுத்து வரினே.
 

இது   முன்னிலை   வினைச்சொல்    வன்கணத்துக்கண்   முடியுமாறு
கூறுகின்றது.
  

இதன் பொருள்:    உயிரீறாகிய       முன்னிலைக்    கிளவியும் -
உயிரீறாய்வந்த முன்னிலை வினைச்சொற்களும்,  புள்ளியிறுதி  முன்னிலைக்
கிளவியும்    -    புள்ளியீறாய்வந்த    முன்னிலை   வினைச்சொற்களும்,
வல்லெழுத்துவரின் - வல்லெழுத்து முதலாகிய மொழிவரின், இயல்பாகுநவும்
உறழாகுநவுமென்று   ஆயீரியல   -   இயல்பாய்  முடிவனவும்  உறழ்ந்து
முடிவனவுமென அவ்விரண்டு இயல்பினையுடைய என்றவாறு.
 

உதாரணம் : எறிகொற்றா       கொணாகொற்றா       உண்கொற்றா
தின்கொற்றா  சாத்தா  தேவா  பூதா  என  இவை  இயல்பு.   நடகொற்றா
நடக்கொற்றா ஈர்கொற்றா ஈர்க்கொற்றா சாத்தா தேவா  பூதா  என  இவை
உறழ்ச்சி.  ஈறென்று  ஓதினமையின்   வினைச்சொல்லே   கொள்க. இவை
1முன்னின்றான்          தொழிலுணர்த்துவனவும்,            அவனைத்
தொழிற்படுத்துவனவுமென   இருவகைய.   இ   ஐ     ஆய்   முதலியன
தொழிலுணர்த்துவன.   நட   வா   முதலியன    உயிரீறும்   புள்ளியீறுந்
தொழிற்படுத்துவன. நில்கொற்றா  நிற்கொற்றா  எனத்  திரிந்துறழ்ந்தனவும்,
உறழாகுநவு மென்னும் பொதுவகையான் முடிக்க.  இயல்பு  முறழ்வு  மென்
றிரண்டியல்பின   என்னாது   ஆகுநவு    மென்றதனான்    துக்கொற்றா
நொக்கொற்றா ஞெள்ளா நாகா மாடா வடுகா என  ஓரெழுத்  தொருமொழி
முன்னிலைவினைச்சொல்மிக்கே முடிதல் கொள்க.
 

(9)
 

1. முன்னின்றான்   தொழிலுணர்த்துவன    முன்னிலை   வினைமுற்று.
முன்னின்றானைத்   தொழிற்படுத்துவன   ஏவல்    வினைமுற்று.   இவை
அவ்விரண்டற்கும் வேறுபாடு.