154தொகைமரபு

பெயர்களும்,   எல்லாவழியும்  -     நான்கு     கணத்து   அல்வழியும்
வேற்றுமையுமாகிய   எல்லா   இடத்தும், இயல்பென மொழிப - இயல்பாய்
முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

வன்கணம்    ஒழிந்த    கணங்களை   'ஞ ந ம ய வ'   (எழு - 144)
என்பதனான்  முடிப்பாரும்  உளர்.  அது   பொருந்தாது,   இவ்வாசிரியர்
உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் எடுத்தோதியே முடிப்பாராதலின்.
 

உதாரணம் : நம்பி  அவன்  எனவும், நங்கை அவள் எனவும் நிறுத்தி,
அல்வழிக்கட் குறியன்  சிறியன்   தீயன்   பெரியன்   எனவும்,   குறியள்
சிறியள்   தீயள்   பெரியள்  எனவும்,  ஞான்றான்  நீண்டான் மாண்டான்
எனவும்,  ஞான்றாள்   நீண்டாள்   மாண்டாள்  எனவும், யாவன் வலியன்
எனவும்,   யாவள்   வலியள்    எனவும்,     அடைந்தான்   ஆயினான்
ஒளவியத்தான் எனவும்,   அழகியள்   ஆடினாள்  ஒளவியத்தாள் எனவும்
ஒட்டுக. இனி வேற்றுமைக்கட் கை செவி தலை   புறம்   எனவும்,  ஞாற்சி
நீட்சி   மாட்சி   எனவும்,  யாப்பு   வன்மை  எனவும்,  அழகு ஒளவியம்
எனவும்   எல்லாவற்றோடும்    ஒட்டுக.    ஒருவேன்   எனத்  தன்மைப்
பெயர்க்கண்ணுங் குறியேன்   சிறியேன்   தீயேன்   பெரியேன்   எனவும்,
கை   செவி   தலை   புறம்   எனவும்   ஒட்டுக. நீ  முன்னிலை விரவுப்
பெயராதலின் ஈண்டைக் காகா.
 

இனி, உயிரீறு புள்ளியிறுதி என்ற   மிகையானே   உயர்திணைப்பெயர்
1திரிந்து   முடிவனவுங்   கொள்க.   கபிலபரணர்,  இறைவநெடுவேட்டுவர்,
மருத்துவமாணிக்கர்   என   னகர   ஈறு  கெட்டு  இயல்பாய்  முடிந்தன.
ஆசீவகப்பள்ளி   நிக்கந்தக்கோட்டம்   என   இவை   அவ்வீறு  கெட்டு
ஒற்று   மிக்கு   முடிந்தன.  ஈழவக்கத்தி   வாணிகத்தெரு   அரசக்கன்னி
கோலிகக்கருவி என இவை ஒருமையீறும்  பன்மையீறுங்   கெட்டு   மிக்கு
முடிந்தன.     குமரகோட்டம்       குமரக்கோட்டம்,     பிரமகோட்டம்
பிரமக்கோட்டம்   என   இவை   ஈறுகெட்டு   வல்லெழுத்து  உறழ்ந்தன.
வண்ணாரப்பெண்டிர்   இது     மிக்கு      முடிந்தது.     பல்சங்கத்தார்
பல்சான்றோர் பல்லரசர் என்றார் போல்வன ரகரவீறும் அதன்  முன்னின்ற
அகரமுங் கெட்டுப் பிறசெய்கைகளும் பெற்று முடிந்தன. 


1. திரிபு - விகாரம்.