சொல், புள்ளியிறுதி முன்னும் உயிரிறு கிளவி முன்னும் வரின் - புள்ளி யீற்றுச்சொன் முன்னரும் உயிரீற்றுச்சொன் முன்னரும் வருமாயின், மெய்ம்மையாகலும் உறழத்தோன்றலும் அம் முறையிரண்டும் உரியவை உள - அவற்றுள் இயல்பாகலும் உறழத்தோன்றலுமாகிய அம்முறை யிரண்டும் பெறுதற்கு உரிய உளவாதலால், வேற்றுமை மருங்கிற் சொல்லிய முறையான் வேண்டும் வல்லெழுத்து மிகுதி - உயிர் மயங்கியலுள்ளும் புள்ளி மயங்கியலுள்ளும் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லிய முறையான் விரும்பும் வல்லெழுத்து மிகுதியை, போற்றல் - ஈண்டுக் கொள்ளற்க என்றவாறு. |
மெய்ம்மை 1பட்டாங்காதலின் இயல்பாம். |
உதாரணம்: நாய் புலி என நிறுத்திக் கோட்பட்டான் சாரப்பட்டான் தீண்டப்பட்டான் பாயப்பட்டான் என வருவித்து இயல்பாயவாறு காண்க. சூர்கோட்பட்டான் சூர்க்கோட்பட்டான், வளிகோட்பட்டான் வளிக்கோட்பட்டான், சாரப்பட்டான், தீண்டப்பட்டான், பாயப்பட்டான் என இவை உறழ்ந்தன. இவை நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவனவற்றைத் தொகுத்தார். |
புள்ளியிறுதி உயிரிறுகிளவி என்றதனாற் பேஎய்கோட்பட்டான் பேஎய்க்கோட்பட்டான் என எகரப்பேறும் உறழ்ச்சிக்குக் கொடுக்க அம்முறை யிரண்டு முரியவை யுளவே என்றதனாற் பாம்புகோட்பட்டான் பாப்புக்கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள், நிலைமொழியொற்றுத் திரிதலுங் கொள்க இவ் வீறுகள் நாய்க்கால் தேர்க்கால் கிளிக்கால் என ஆண்டு வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுமாறு காண்க. |
(14) |
157. | மெல்லெழுத்துமிகுவழிவலிப்பொடுதோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலு மியற்கை மருங்கின் மிகற்கை தோன்றலு முயிர்மிக வருவழி யுயிர்கெட வருதலுஞ் சாரியை யுள்வழிச் சாரியை கெடுதலுஞ் |
|
1. பட்டாங்கு - உண்மை. உண்மையாவது விகாரமின்றி இயல்பாய் நிற்றல். ஆதலின் மெய்ம்மை இயல்பு என்றபடி. |