160தொகைமரபு

தன்னுருபு நிற்றலும் (இதற்கு வல்லெழுத்துப்பேறு ஈற்று வகையாற் கொள்க),
சாரியை இயற்கை உறழத் தோன்றலும் - 'புளிமரக் கிளவிக்கு' (எழு - 244)
எனவும்,  'பனையு  மரையும்'  (எழு - 283)    எனவும் 'பூல்வே லென்றா'
(எழு - 375)   எனவும்   பெற்ற   சாரியை    பெறாது  இயல்பாய் நின்று
புளிகுறைத்தான்   புளிக்குறைத்தான்    பனைதடிந்தான்  பனைத்தடிந்தான்
பூல்குறைத்தான்   பூற்குறைத்தான்   என  மிக்குந் திரிந்தும் உறழ்ச்சியாகத்
தோன்றலும், உயர்திணை  மருங்கின்  ஒழியாது  வருதலும் - 'உயிரீ றாகிய
வுயர்திணைப்  பெயரும்'   (எழு - 153)   என்பதனான்  வேற்றுமைக்கண்
இயல்பாய்  வருமென்றவை   நம்பியைக்    கொணர்ந்தான்   நங்கையைக்
கொணர்ந்தான்  என்றவழி     இரண்டனுருபு     தொகாதே   நிற்றலும்,
(ஒழியாதென்றதனான்  மகற்   பெற்றான்   மகட்     பெற்றான்   எனவும்
ஆடுஉவறிசொல்   'மழவ ரோட்டிய'   'அவர்க்கண்   டெம்முள்' எனவும்
ஒழிந்தும் வருமென்று  கொள்க.)  அஃறிணை விரவுப் பெயர்க்கு அவ்வியல்
நிலையலும் -  உயர்திணையோடு   அஃறிணை     விரவும்   பெயர்க்குக்
கொற்றனைக்  கொணர்ந்தானென  உருபு  தொகாதே நிற்றலும், (அவ்வியல்
நிலையலும்  என்றதனானே   மகப்பெற்றேனென  விரவுப் பெயர்க்கண்ணுந்
தொகுதல்  கொள்க.  உருபியலுட்  'தேருங்  காலை'  (எழு - 202)  என்ற
இலேசான்  இதற்கும்   முன்னையதற்கும் வல்லெழுத்துப் பேறுங் கொள்க).
மெய்பிறிதாகிடத்து இயற்கையாதலும் - புள்ளி மயங்கியலுள் ணகார  னகார
இறுதி வல்லெழுத்தியையின் மெய்பிறிதாமென்ற  இடத்து  மெய்பிறிதாகாது
மண்கொணர்ந்தான் பொன் கொணர்ந்தான் என  இயற்கையாய்  வருதலும்,
அன்ன   பிறவும்  -  அவைபோல்வன    பிறவும்,    (அவை 'எக்கண்டு
பெயருங்காலை யாழநின்  கற்கெழு  சிறுகுடி'  எனவும்  'நப்புணர் வில்லா
நயனில்லோர் நட்பு'  எனவும்  வருவழி  எக்கண்டு  நப்புணர்வு  என்னும்
தொடக்கங்குறுகும் உயர்திணைப்  பெயர்கள்  மெல்லெழுத்துப்  பெறுதற்கு
உரியன வல்லெழுத்துப்  பெறுதல்   கொள்க.  இன்னுந்   தினைபிளந்தான்
மயிர்குறைத்தான் தற்கொண்டான் செறுத்தான் புகழ்ந்தான் என வரும்.) தன்
இயல்மருங்கின்  -   தன்னையே    நோக்கித்     திரிபு   நடக்குமிடத்து,
மெய்பெறக்கிளந்து  பொருள்   வரைந்து   இசைக்கும்   -  பொருள்பெற
எடுத்தோதப்பட்டு