ஏனை வேற்றுமைப் பொருட் புணர்ச்சியது பொது முடிபினைத்தான் நீக்கி வேறு முடிபிற்றாய் நின்று ஒலிக்கும், ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப - இரண்டாம் வேற்றுமையது வேறுபட்ட புணர்ச்சி என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
மெய்பெற என்றதனானே சாரியையுள்வழித் தன்னுருபு நிலையாது செய்யுட்கண் வருவனவும் பிறவற்றின்கண் உறழ்ந்து முடிவனவுங் கொள்க. 'மறங்கடிந்த வருங்கற்பின்' எனவும் 'சிலசொல்லிற் பலகூந்தல்' (புறம் - 166) எனவும் 'ஆயிரு திணையி னிசைக்குமன்' எனவும் பிறாண்டும் பெரும்பான்மையும் வருமென்று கொள்க. 1மைகொணர்ந்தான் மைக்கொணர்ந்தான் வில்கோள் விற்கோள் என வரும். இனி இவ்வாறு திரியாது அகத்தோத்திற் கூறிய பொதுமுடிபே தமக்கு முடிபாக வருவனவுங் கொள்க. அவை கடுக்குறைத்தான் செப்புக்கொணர்ந்தான் என்றாற்போல்வன. 'தம்மினாகிய தொழிற்சொன் முன்வரின்' (எழு - 156) என்ற அதிகாரத்தான் வினைவந்துழியே இங்ஙனம் பெரும்பான்மை திரிவதென்று உணர்க. இனித் தன்னின முடித்தலென்பதனான் ஏழாவதற்கும் வினையோடு முடிவுழித் திரிதல் கொள்க. அது 'வரைபாழ் வருடை' 'புலம்புக் கனனே புல்லணற் காளை' (புறம் - 258) என்றாற்போல வரும். |
(15) |
158. | வேற்றுமை யல்வழி இஐ என்னு மீற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய வவைதா மியல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவு முறழா குநவு மென்மனார் புலவர். |
|
இஃது இகர ஈற்றுப்பெயர்க்கும் ஐகார ஈற்றுப்பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள்: வேற்றுமை யல்வழி - வேற்றுமை யல்லா இடத்து, இ ஐ என்னும் ஈற்றுப்பெயர்க்கிளவி மூவகை நிலைய - இ ஐ என்னும் ஈற்றையுடைய பெயர்ச்சொற்கள் மூவகையாகிய முடிபுநிலையையுடைய, அவை தாம் - அம் |
|
1. உறழ்ந்து முடிந்தது. |