தொகைமரபு163

நீக்கி, சுட்டு முதலாகிய இகர இறுதியும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய
அவ்விகர ஈற்று இடைச்சொல்லும், எகர வினாவின் முதல் இகர இறுதியும் -
எகரமாகிய வினாவினை முதலாகவுடைய அவ்விகர ஈற்று  இடைச்சொல்லும்,
சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும் - சுட்டாகிய  உறுப்பெழுத்து  நீண்ட
அவ்  வைகார  ஈற்று  இடைச்சொல்லும்,  யாவென்   வினாவின்  ஐயென்
இறுதியும்  - யாவென்  வினாவினை  முதற்கணுடைய  அவ்வைகார  ஈற்று
இடைச்சொல்லும்,   வல்லெழுத்து    மிகுநவும்  -  வல்லெழுத்து   மிக்கு
முடிவனவும், உறழாகுநவும் - உறழ்ச்சியாய் முடிவனவும், உளவென மொழிப
- உளவென்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

உதாரணம் :     அதோளிக்கொண்டான்      இதோளிக்கொண்டான்
உதோளிக்கொண்டான்   எதோளிக்கொண்டான்    சென்றான்    தந்தான்
போயினான் எனவும்.     ஆண்டைக்கொண்டான்   ஈண்டைக்கொண்டான்
ஊண்டைக்கொண்டான்  யாண்டைக்  கொண்டான் எனவும் இவை மிக்கன.
அதோளி    அவ்விட     மென்னும்பொருட்டு.     அவ்வழிகொண்டான்
அவ்வழிக்கொண்டான்      இவ்வழிகொண்டான்    இவ்வழிக்கொண்டான்
உவ்வழிகொண்டான்       உவ்வழிக்கொண்டான்     எவ்வழிகொண்டான்
எவ்வழிக்கொண்டான்   என   உறழ்ந்தன.   சுட்டுச்சினை   நீண்டதற்கும்
யாவினாவிற்கும்   வரும்  ஐகார   ஈற்றுக்கு   உதாரணம்    அக்காலத்து
ஆயிடைகொண்டான்       ஆயிடைக்கொண்டான்        என்றாற்போல
ஏனையவற்றிற்கும்   வழங்கியற்றுப்போலும்.  இனி, 1ஆங்கவைகொண்டான்
ஆங்கவைக்கொண்டான்   என்பன    காட்டுவாரும்     உளர்.   அவை
திரிபுடையனவாம்.  சொல்லியல்  என்றதனானே  பிற  ஐகார  ஈறு  மிக்கு
முடிவன   கொள்க.  அன்றைக்  கூத்தர்   பண்டைச்சான்றோ   ரெனவும்
ஒருதிங்களைக்குழவி ஒரு நாளைக்குழவி எனவும் வரும்.
 

(17)
 

160.

நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலுங்
குறியதன் முன்னர்த் தன்னுரு விரட்டலு
மறியத் தோன்றிய நெறியிய லென்ப. 

1. ஆங்கவை - அங்கவை என்பதன் திரிபுபோலும்.