இது புள்ளிமயங்கிலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுகின்றது. |
இதன் பொருள்: நெடியதன்முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் - நெட்டெழுத்தின்முன் நின்ற ஒற்றுத் தன்வடிவு கெடுதலும், குறிய தன் முன்னர்த் தன் உரு இரட்டலும் - குற்றெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன்வடிவு இரட்டித்தலும், அறியத்தோன்றிய நெறியியல் என்ப - அறியும்படி வந்த அடிப்பாட்டியலென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
இங்ஙனம் நெடிய தன்முன்னர் ஒற்றுக்கெடுவன ணகாரமும் னகாரமும் மகாரமும் லகாரமும் ளகாரமும் என ஐவகையாம். |
உதாரணம் : கோணிமிர்ந்தது தானல்லன் தாநல்லர் வேனன்று தோணன்று என நகரம் வருமொழியாதற்கண் நெடிய தன் முன்னர் ஒற்றுக் கெட்டது. கோறீது வேறீது எனத் தகரம் வருமொழியாதற்கண் லகாரவொற்றுக் கெட்டது. ஏனைய வந்துழிக் காண்க. இவற்றை 'லனவென வருஉம்' (எழு - 149) 'ணளவென் புள்ளிமுன்' (எழு - 150) என் பனவற்றான் முடித்துக் கெடுமாறு காண்க. ஒற்றிரட்டுவன ஞகார ஙகார ழகாரம் ஒழிந்தன. கண்ணழகிது பொன்னகல் தம்மாடை சொல்லழகிது எள்ளழகிது நெய்யகல் தெவ்வலன் எனக் குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டின. |
மேலைச் சூத்திரத்து நான்கனுருபு பிற்கூறியவதனான் ஒற்றிரட்டுதல் உயிர்முதன்மொழிக்கண்ணதென்று உணர்க. குறியது பிற்கூறிய முறையன்றிக் கூற்றினால் தம்மை எம்மை நின்னை என நெடியன குறுகிநின்ற வழியுங் குறிய தன்முன்ன ரொற்றாய் இரட்டுதலும், விரனன்று குறணிமிர்ந்தது எனக் குறிலிணையின்முன்னர் வந்த ஒற்றுக் கெடுதலும், வராறீது நன்று எனக் குறினெடிற்கணின்ற ஒற்றுக் கெடுதலும், அதுகொறோழி எனவுங் குரிசிறீயன் எனவுந் தொடர்மொழி யீற்றுநின்ற ஒற்றுக் கெடுதலும், 1இடைச்சொல்லோடு ஒட்டுப்பட்டு நிற்றலுங், காற்றீது எனவும் விரற்றீது என |
|
1. இடைச்சொல்லோடு ஒட்டுப்பட்டு நிற்றலும் என்ற வாக்கியம் ஈண்டுப் பொருத்தமாகக் காணவில்லை. அதுகொல் என்பதைத் தொடர்மொழி என்றமையால் அதற்கேற்ப அதுகொறோழி என்பது இடைச்சொல்லோடு ஒட்டுப்பட்டு நின்றது என்று கூறியிருக்கலாம்போலும். ஆய்க. |