புள்ளியீறு முற்கூறாததனானே குறுணிநானாழி ஐந்நாழியுழக்கு என ஏகாரமின்றி வருவனவுங் கொள்க. |
(22) |
165. | அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றாற் சாரியை யியற்கை. |
|
இஃது எய்தியது விலக்கிற்று. |
இதன் பொருள்: அரையெனவரூஉம் பால்வரைகிளவிக்கு - அம்மூவகைச்சொன் முன்னர் வரும் அரையென்று சொல்ல வருகின்ற பொருட்கூற்றை உணரநின்ற சொல்லிற்கு, சாரியையியற்கை புரைவதன்று - ஏயென்சாரியை பெறுந்தன்மை பொருந்துவதன்று என்றவாறு. |
ஆல் அசை. |
உதாரணம் : உழக்கரை செவிட்டரை மூவுழக்கரை எனவும், கஃசரை கழஞ்சரை தொடியரை கொள்ளரை எனவும், ஒன்றரை பத்தரை எனவும் இவை ஏயென் சாரியை பெறாவாய் வந்தன. புரைவதன்றென்றதனாற் கலவரையென்பதனை ஒற்றுக்கெடுத்துச் செய்கைசெய்து முடிக்க. இதனானே 1செவிட்டரை யென்புழி டகரவொற்று மிகுதலுங் கொள்க. 'ஒட்டுதற் கொழுகிய வழக்கு' (எழு - 132) அன்மையிற் சாரியை பெறாவாயின வென்றாலோவெனின் அவை பெற்றும் பெறாதும் வருவனவற்றிற்குக் கூறிய தாகலானும் இது 'தம்மகப் பட்ட' (எழு - 164) என வரைந்தோதினமையானும் விலக்கல் வேண்டிற்று. |
(23) |
166. | குறையென் கிளவி முன்வரு காலை நிறையத்தோன்றும் வேற்றுமையியற்கை. |
|
இஃது எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது, ஏயென் சாரியை விலக்கி வேற்றுமை முடிபினோடு மாட்டெறிதலின். |
|
1. செவிட்டரை என்பது - 'தம்மகப்பட்ட முத்தை வருங்காலந் தோன்றின் ஒத்ததென்ப.............ஏயென்சாரியை' என்பதனால் செவிட்டேயரை என ஏ என்சாரியை பெற்று வரவேண்டும். அங்ஙனம் பெறவேண்டிய இடத்துப் பெறாது செவிட்டரை என நிற்றலின், இதற்கு இச் சூத்திரவிதி வேண்டியதாயிற்று. பெறாமல் வருவனவற்றிற்கே ஒட்டுதற்கொழுகிய வழக்கன்று என்னும்விதி கொள்ளப்படும். ஆதலின் இது அதனாற் கொள்ளப்படாதென்க. |