180உருபியல்

உதாரணம் : அவற்றை அவற்றொடு,  இவற்றை  இவற்றொடு, உவற்றை
உவற்றொடு என ஒட்டுக. (11)
 

184.

ஏனை வகர மின்னொடு சிவணும்.
 

இஃது எய்தாத தெய்துவித்தது; பெயர்க்கேயன்றி உரிச்சொல் வகரத்திற்கு
முடிபு கூறுதலின்.
  

இதன் பொருள்: ஏனை வகரம்  இன்னொடு   சிவணும்   -  ஒழிந்த
உரிச்சொல் வகரம் இன்சாரியையோடு பொருந்தி முடியும் என்றவாறு.
 

1தெவ்வினை தெவ்வினொடு  என  ஒட்டுக. இஃது உரிச் சொல்லாயினும்
2படுத்தலோசையாற் பெயராயிற்று.
 

(12)
 

185.

மஃகான் புள்ளிமு னத்தே சாரியை.
இது மகர ஈறு புணருமாறு கூறுகின்றது.

 

இதன் பொருள்: மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை -  மகரமாகிய
புள்ளியீற்றுச் சொன்முன் வருஞ் சாரியை அத்துச் சாரியை என்றவாறு.
 

உதாரணம் : மரத்தை மரத்தொடு  நுகத்தை  நுகத்தொடு என ஒட்டுக.
'அத்தே வற்றே' (எழு - 133) 'அத்தி னகரம்' (எழு - 125) என்பனவற்றான்
முடிக்க.
 

(13)
 

186.

இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே.
 

இது  மகர  ஈற்றிற்  சிலவற்றிற்கு   எய்தியது   விலக்கிப்   பிறிதுவிதி
வகுக்கின்றது.
 

இதன் பொருள்: இன்னிடை  வரூஉம்  மொழியுமாருள - மகர ஈற்றுச்
சொற்களுள்   அத்தேயன்றி   இன்சாரியை   இடையே   வந்து  முடியுஞ்
சொற்களும் உள என்றவாறு.
 

மார் அசை.


1. தெவ் - பகை ; உரிச்சொல். தெவ்வுப் பகையாகும் என்பது உரியியல்
18 - ஞ் சூத்திரம்.
 

2. படுத்தலோசையாற் பெயராயிற்று என்றது பகைவனையுணர்த்தலின்.