உருபியல்181

உதாரணம் :  உருமினை  உருமினொடு, திருமினை திருமினொடு என
வொட்டுக.
 

14
 

187.

நும்மெ னிறுதி யியற்கை யாகும்.
 

இது   மகர  ஈற்றுள்   ஒன்றற்கு  எய்தியது  விலக்கிப்   பிறிது  விதி
வகுக்கின்றது.
 

இதன் பொருள் :நும்மென்  இறுதி  இயற்கையாகும் -  நும்மென்னும்
மகர  ஈறு  மேற்கூறிய  அத்தும்  இன்னும்  பெறாது  இயல்பாக  முடியும்
என்றவாறு.
 

உதாரணம் : நும்மை,  நும்மொடு,  நுமக்கு, நும்மின்,  நுமது, நுங்கண்
என வரும்.
 

நுமக்கு  நுமது என்பனவற்றிற்கு 'ஆற னுருபினு நான்கனுருபினும்' (எழு
- 161)  'நும்மெனிறுதியு  மந்நிலை'  (எழு - 162)  'வல்லெழுத்து  முதலிய'
(எழு  - 114) 'ஆற னுருபி னகரக் கிளவி' (எழு - 115) என்பன கொணர்ந்து
முடிக்க.
 

நுங்கணென்பதற்கு    1மேலைச்சூத்திரத்து     'மெய்'    என்றதனான்
மகரவொற்றுக்கெடுத்து 'வல்லெழுத்து முதலிய' என்பதனான் மெல்லொற்றுக்
கொடுக்க. இயற்கையென்றார் சாரியை பெறாமை கருதி.
 

(15)
 

188.

தாநா மென்னு மகர விறுதியும்
யாமெ னிறுதியு மதனோ ரன்ன
ஆஎ ஆகும் யாமெ னிறுதி
யாவயின் யகரமெய் கெடுதல் வேண்டு
மேனை யிரண்டு நெடுமுதல் குறுகும்.

 

இது  மகர  ஈற்றில்  முற்கூறிய  முடிபு   ஒவ்வா  தனவற்றிற்கு  முடிபு
கூறுகின்றது.
 

இதன் பொருள் : தாம்  நாம்  என்னும்  மகர   இறுதியும்  யாமென்
இறுதியும் அதனோரன்ன  -  தாம்   நாமென்று  கூறப்படும்  மகர  ஈறும்
யாமென்னும் மகர  ஈறும்  நும்மென்னும் மகர ஈறுபோல அத்தும் இன்னும்
பெறாது முடிதலையுடைய,


1. மேலைச் சூத்திரமென்றது வருஞ் சூத்திரத்தை.