194உயிர்மயங்கியல்

1உவமம்  வினையெச்சவினைக்குறிப்பேனும்  ஒன்றனோடு  பொருவப்படுதல்
நோக்கி    உவமவியலின்கண்    ஆசிரியர்    வேறுபடுத்திக்   கூறினார்.
எனவென்னும்  எச்சமும்  இருசொல்லையும்   இயைவிக்கின்றநிலைமையான்
இடைச்சொல்லோத்தினுள்       வேறோதினார்.     ஆங்க      என்பது
ஏழனுருபின்பொருள்பட   வந்ததல்லாமை   'ஆங்கவென்னு   முரையசை'
என்றதனானும்   'ஆங்கவுரையசை'  என்னும் இடையியற்  சூத்திரத்தானும்
உணர்க. இவை  இயல்புகணத்துக்கண் முடியும்  முடிபு 'ஞநம  யவ' (எழு -
144)   என்புழிக் கூறியதேயாம். அவை   தாவ,   புலிபோல,  கொள்ளென
ஆங்க   என   நிறுத்தி  ஞநமயவ  முதலிய  மொழி ஏற்பன கொணர்ந்து
புணர்த்தி இயல்பாமாறு ஒட்டிக்கொள்க. சுட்டு மேற் கூறுப.
 

(2)
 

205.

சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றி
னொட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும்.

 

இது  'ஞநம யவ'  (எழு - 144)  என்னுஞ்  சூத்திரத்தான்  மென்கணம்
இயல்பாகும் என முற்கூறியதனை  விலக்கிமிக்கு முடிக என்றலின் எய்தியது
விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.
 

இதன் பொருள் :சுட்டின்  முன்னர்  ஞநமத்  தோன்றின்  -  அகரச்
சுட்டின்  முன்னர்  ஞநமக்கண்  முதலாகிய  மொழிவரின்,  ஒட்டிய  ஒற்று
இடைமிகுதல்  வேண்டும் - தத்தமக்குப் பொருந்தின ஒற்று இடைமிகுதலை
விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
 

அஞ்ஞாண் அந்நூல் அம்மணி என வரும்.
 

ஒட்டியவென்றதனான் அஞ்ஞெளிந்தது அந்நன்று அம்மாண்டது என
அகரந் தன்னையுணர நின்றவழியும் மிகுதல் கொள்க.
 

(3)

1. போல  முதலிய உவமச்சொல்   வினையெச்சவினைக்  குறிப்பாகவுங்
கொள்ளப்படுமாயினும்   உவமைப்பொருள்  தந்தும்    நிற்றலின்   ஈண்டு
உவமக்   கிளவியுமென்றார். வேறுபடுத்தல் -  உவமை  இடைச்சொல்லாகக்
கோடல்.     போல    முதலிய    வினையெச்ச   வினைக்குறிப்பென்பது
நச்சினார்க்கினியர்    கருத்து.    சேனாவரையர்   முதலியோர்   கருத்து
அன்னதன்று.