198உயிர்மயங்கியல்

னான்   மிக்குமுடிதலை  விலக்கிற்று.   ஊர   கேள் சொல் தா போ என
'உயிரீ  றாகிய வுயர்திணை' என்னுஞ்  சூத்திரத்தான்  இயல்பாய்  முடிவது
ஈண்டு  னகரங்கெட்டு  அகர  ஈறாய்  விளியேற்று முடிந்தமையின் எய்தாத
தெய்துவித்தது. உண்மன குதிரை செந்நாய்  தகர்  பன்றி  என்பனவற்றிற்கு
உண்ணுமென  விரித்தும்  யானுண்மன   நீயுண்மன   அவனுண்மன  என
நிறுத்திக் கூழ் சோறு தேன் பால் என  வருவித்தும் முடிக்க.  இவற்றிற்கும்
அவ்வாறே  விரித்துக்கொள்க. இங்ஙனஞ் செய்யுமென்பதன் பொருட்டாகிய
மனவெ னிறுதிச்சொல் அக்காலம் வழங்கியதாதலின் ஆசிரியர்  அதனையும்
வேறாக   எடுத்தோதினார்.  யானும்  நின்னோடுடன்வருக   அவன்செல்க
அவள்செல்க  அவர்செல்க  என  நிறுத்திக்  காட்டின்கண்  செறுவின்கண்
தானைக்கண்    போரின்கண்     என    வருவித்து   முடிக்க.   இவை
ஏவற்பொருண்மையை  முற்ற  முடித்தன.  ஏவல் கண்ணியவெனவே ஏவல்
கண்ணாதனவும்  உளவாயின.  அவை ; நீ செல்க 1அதுசெல்க அவைசெல்க
என நிறுத்தி  முற்கூறிய  காடு  முதலியவற்றை  வருவித்து முடிக்க. இவை
ஏவற்    பொருண்மையை    முற்ற    முடியாதன.   அஃறிணை   ஏவற்
பொருண்மையை  முற்ற  முடியாமை  வினையியலுள்  வியங்கோட்கண்ணே
பொருளியலுஞ்  செய்யுளியலும்பற்றிக்  கூறுதும்.   மனவும்  வியங்கோளும்
எய்தாத   தெய்துவித்தது.  உண்டகுதிரை  செந்நாய்  தகர் பன்றி  இதுவும்
அது.  இதற்கு  உரிய  உண்ணாத  குதிரையென்னும்  எதிர்மறையும் நல்ல
குதிரையென்னும் குறிப்புங்  கொள்க  உண்ணிய  கொண்டான்  சென்றான்
தந்தான்  போயினான்  இது முன்னர் வினையெச்சம்  வல்லெழுத்துப்பெறுக
என்றலின்   எய்தியது   விலக்கிற்று.   அம்மகொற்றா    சாத்தா   தேவா
பூதா  என்பது இடைச்சொல்லாதலின்  எய்தாததெய்துவித்தது.  இதுகேளாய்
கொற்றனே  என  எதிர்முகமாக்கியவாறு  காண்க. பல்லகுதிரை பலகுதிரை
சில்லகுதிரை   சிலகுதிரை   உள்ளகுதிரை  இல்லகுதிரை  செந்நாய்  தகர்
பன்றி என ஒட்டுக. இக்காலத்துப்  பல்ல சில்ல  என்பன வழங்கா. இதுவும்
விளக்குறிது என்றாற்போலப் பலக்குதிரையென


1. அது செல்க என்புழி அது  என்று  சுட்டிய  அஃறிணைப்  பொருள்,
செல்க     என்னும்     ஏவலை   உணர்ந்து     செல்லமாட்டாமையின்
அஃறிணைக்கண்வரும் வியங்கோளை ஏவல்கண்ணாதன என்றார்.