வல்லெழுத்தெய்தியதனை விலக்கிற்று. விளிநிலைக் கிளவியாகிய பெயர் முற்கூறாததனானே செய்யுமென்பதன் மறையாகிய செய்யாதவென்பதற்கும் இவ்வியல்பு முடிபுகொள்க. அது வாராத கொற்றனென வரும். இவ்வியல்பு முடிபிற்குச் செய்ம்மன சிறத்தலின் வியங்கோட்குமுன் வைத்தார். ஏவல் கண்ணிய என்பதனான் ஏவல் கண்ணாததும் உளதென்றுகூறி 'மன்னிய பெருமநீ' (புறம் - 91) என் உதாரணங் காட்டுகவெனின், அது பொருந்தாது ; கூறுகின்றான் அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே கருதிக் கூறுதலின் அதுவும் ஏவல்கண்ணிற்றேயாம். எல்லாவற்றினுஞ் சிறந்த பலவற்றிறுதி முற்கூறுகவெனின், அது வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேறுவேறு முடிபுடைத்தென்றற்குஞ் செய்யுண்முடிபு இவ்வியல்புபோற் சிறப்பின்றென்றற்கும் அகர ஈற்றுள் முடிபு கூறாதுநின்ற முற்றுவினையும் வினைக்குறிப்பும் இவ்வியல்பு முடிபு பெறுமென்றற்கும் பின் வைத்தார். உண்டனகுதிரை இது முற்றுவினை. கரியனகுதிரை இது முற்றுவினைக் குறிப்பு. இஃது இயல்புகணத்து முடிபு 'ஞநமயவ' (எழு - 144) என்புழிப் பொருந்துவனவெல்லாங் கொள்க. |
(1) |
211. | வாழிய வென்னுஞ் செயவென் கிளவி யிறுதி யகரங் கெடுதலு முரித்தே. |
|
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. |
இதன்பொருள் :1வாழிய என்னுஞ் செய என் கிளவி - வாழுங்காலம் நெடுங்காலமாகுக என்னும் பொருளைத்தரும் வாழியவென்று சொல்லப்படுஞ் செயவெனெச்சக்கிளவி, இறுதி யகரங் கெடுதலும் உரித்து - இறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட யகரவொற்றுங் கெட்டு முடிதலும் உரித்து என்றவாறு. |
|
1. 'வாழிய வென்னுஞ் சேயவென் கிளவி' எனச் சூத்திரத்தைத் திருத்துக. இஃது ஒன்றை ஒன்று விசேடித்து முற்றாதலை உணர்த்தும். சேய என்பதற்கு நீண்டகாலமாகுக என்பது பொருள். இஃது உரையாசிரிய ருரையானும் நன்குவிளங்கும். சேய என்பது முற்று மொழியாய் அஃறிணைப் பன்மையில் வருமாயினும் ஈண்டு வாழிய வென்பதனால் விசேடிக்கப்பட்டமையின் வியங்கோள் முற்றாதலை உணர்த்துமென்க. சேயென் கிளவி என்று மகாலிங்கையர் |